தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிகராக பிரபலமானவர்தான் திருச்சி சரவணகுமார் . இவர் மிமிக்ரி கலைஞராகவும் புகழ்பெற்றார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இவர் காந்தி கணக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல தொலைக்காட்சி சேனல்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். சன் டிவியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆதித்யா காமெடி சேனலில் விஜேவாகவும் பணியாற்றினார். கலைஞர் டிவி மற்றும் மக்கள் டிவி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.
டப்பிங் கலைஞராக பல்வேறு கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர் தான் சரவணகுமார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலமாக புகழ் பெற்ற இயக்குனர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் farzi தொடரில் இவர்தான் குரல் கொடுத்தார். இவர் மற்றும் அசார் இருவருமே இணைந்து செய்யும் நகைச்சுவையைக் காண தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 8 இன் கோப்பையை வென்ற இவர் தற்போது சில நிகழ்ச்சிகளில் அடிக்கடி தலைகாட்டி வருகின்றார். அதே சமயம் படங்களிலும் நடித்து வரும் இவர் இறுதியாக அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கனா, எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வசனம் எழுதிய வருமான தமிழரசன் பச்சமுத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி உள்ள டி எஸ் கே, இந்த திரைப்படத்தை பார்த்து என் நண்பர்கள் பலரும் திட்டினார்கள். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் கால் செய்து, நீ காமெடி நடிகர் தானே எதுக்கு இப்படி ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாய் என்று திட்டினார். நான் உடனே கூறினேன், இதற்காகத்தான் நான் இத்தனை நாட்களாக காத்திருந்தேன், TSK என்ற பெயரை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று காத்திருந்த சமயத்தில் இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் எதிர்பார்த்த வெற்றி இந்த படம் மூலம் எனக்கு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…
தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…
புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலமாக செஞ்சியைச் சேர்ந்த ஆதி மற்றும் சென்னையைச்…
மும்பை மாலாடு பகுதியில் உள்ள இன்ஃபினிட்டி மாலில், வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரம் சமூக…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…