புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் சியா கோயல் காவல்துறையினரிடம் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் அளித்துள்ளார். தனக்கு கேதனைத் திருமணம் செய்யப் பிடிக்கவில்லை என்றும், தனது காதலன் சேத்தன் சௌத்ரியுடன் இணைந்து இக்கொலையைச் செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். வரவிருக்கும் நவம்பர் மாத திருமணத்தை நிறுத்துவது குறித்துத் தனது குடும்பத்தினரிடம் பேசுவதை விட, கேதனைக் கொல்வது “எளிதானது” என்று தான் கருதியதாக அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது குடும்பத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது என்பதற்காகவே, திருமணத்தை நிறுத்துவதற்குப் பதிலாகத் தனது வருங்காலக் கணவரைக் கொல்லத் தான் துணிந்ததாகச் சியா கோயல் காவல் துறை விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்தச் பரபரப்பான கொலை வழக்கு குறித்துப் புலனாய்வு செய்ய புனே மற்றும் லோனாவாலா காவல்துறையினர் இணைந்து ஆறு தனிப்படைகளை அமைத்துள்ளனர். தற்போது சியா கோயலின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் சாஹில் கோயல் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சியா கோயலுக்கும் அவரது காதலன் சேத்தன் சௌத்ரிக்கும் இடையே கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சுமார் 2,000 முறைக்கும் மேலாகத் தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளதாகவும், அவற்றின் மொத்த கால அளவு 238 மணி நேரம் என்றும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சியாவின் குடும்பத்தினர் சேத்தன் சௌத்ரியைத் தங்களுக்குத் தெரியாது என்று மறுத்துள்ள நிலையில், சியாவின் வழக்கறிஞர் சேத்தனை ஒரு “நண்பர்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சதித்திட்டத்தை நிரூபிப்பதற்காக, அவர்கள் இருவரின் மொபைல் போன்களிலிருந்து அழிக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…