சத்குருவின் பாத போட்டோ இவ்வளவு விலையா…? புதிய சர்ச்சையில் சிக்கிய ஈஷா…

Spread the love

சத்குரு ஜக்கி வாசுதேவ், ஞானியாகவும், யோகியாகவும், குருவாகவும் திகழ்பவர். இவர் நிறுவியுள்ள ஷா அறக்கட்டளை மதசார்பற்ற லாபநோக்கியாத ஒரு பொது தொண்டு நிறுவனமாக இந்தியா, இங்கிலாந்து, லெபனான், சிங்கப்பூர், கனடா, மலேசியா, உகந்தா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சத்குரு ஜக்கி வாசுதேவ் அறக்கட்டளை சமூக மற்றும் சுற்றுப்புற நல செயல்பாடுகளில் பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறது. இவரின் ஈஷா யோக மையம் கோயம்புத்தூரில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. இங்கு பலதரப்பட்ட மக்களுக்கு யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது மற்றும் வெளியுலகில் இருந்து தங்களை தனிமைப்படுத்தி ஆன்மீக பயணம் மேற்கொள்பவர்கள் இங்கு வந்து தங்கிச் செல்கிறார்கள். இதில் பல பிரபலமான நடிகர் நடிகைகளும் அடங்குவர்.

கோயம்புத்தூர் ஷா யோகா மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் உலகின் முதல் 112 அடி ஆதியோகி திருவுரு சிலையை நிறுவி இருக்கிறார். இது யோகாவின் மூலத்தின் அடிப்படையாகக் கொண்டு வடிவமைமிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆதியோகி திருவுருவ சிலை பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் புது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அது என்னவென்றால் ஈஷா இணையத்தின் வழியாக பல இயற்கையான பொருட்கள் விற்கப்படுகிறது. இந்நிலையில் அந்த ஈஷா இணையத்தில் சத்குரு அவர்களின் பாத போட்டோ ரூபாய் 3200 என்ற விலை போட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது தான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ஈஷாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சத்குருவின் பாத போட்டோ இடம் பெற்று இருக்கிறது. குருவின் பாதத்தை போற்றினால் ஞானத்தை அடையலாம் என சத்குருவின் போட்டோவிற்கு விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது. இது இணையத்தில் பேச்சு பொருளாகி வருகிறது. ஏற்கனவே ஷாவின் முன்பு பலவித வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

8 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

8 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

9 மணத்தியாலங்கள் ago