தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இவர் முதலில் தெலுங்கு திரைப்படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமானார். நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான பிரியங்கா மோகனனை தமிழ் திரை உலகின் பக்கம் கொண்டு வந்தவர் இயக்குனர் நெல்சன் தான். கடந்த 2021 ஆம் ஆண்டு சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினியாக நடித்திருந்தார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே துள்ளலான ஆட்டத்தாலும் க்யூட்டான நடிப்பாலும் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களுமே அடுத்தடுத்த வெற்றிவாகை சூடியது. இதனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. தெலுங்கில் மாடர்ன் லுக்கில் ஹீரோயினியாக பிரியங்கா மோகன் நடித்தாலும் தமிழில் தொடர்ந்து ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இறுதியாக தனுசுக்கு ஜோடியாக கேப்டன் விழா திரைப்படத்தில் இவர் நடித்திருந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து பிரதர் திரைப்படத்தின் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் விபத்தில் சிக்கியதாக சமூக வலைத்தளங்களில் பிரியங்கா மோகன் போட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று தொரூரில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் நடந்த விபத்தில் நான் நலமாக இருக்கிறேன் . சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன் என்பதை எனது நலம் விரும்புகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். தற்போது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…
மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…
\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…
தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த மதிமுக, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவு…
தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…
அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…