#image_title
இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படுவது விவசாயம் மற்றும் விவசாயிகள். பலதரப்பட்ட விவசாயங்கள் இருக்கிறது. தானியங்களை விளைவித்தாலும் வித்தியாசமான முறையில் விவசாயத்தை அணுகுபவர்கள் ஒரு சிலரே. அப்படி குங்குமப்பூக்கு பெயர் பெற்றதே காஷ்மீர் தான். ஆனால் 64 வயதான ஷூபா என்ற பெண்மணி உத்தரப்பிரதேசத்தில் குங்குமபூவை வளர்த்து அதன் மூலம் தொழிலை தொடங்கி சாதித்து இருக்கிறார். அவரைப் பற்றி இனி காண்போம்.
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் குங்குமப்பூ உற்பத்தி சரிவை கண்டது. இந்த நிலைமையை கண்ட ஷூபா தனக்கு இருக்கும் விவசாய பின்புலத்தை கொண்டு குங்குமப்பூ விவசாயத்தை செய்யலாம் என்று முடிவெடுத்தார். அதிக ஆபத்துகள் மற்றும் சவால்கள் இந்த குங்குமப்பூ விவசாயத்தில் இருந்த போதிலும் அவரது குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர். குங்குமப்பூ சாகுபடி மிகவும் சவாலானது காலநிலை மாற்றம் தான். காஷ்மீர் காலநிலையில்தான் குங்குமப்பூ வளரும் மற்ற இடங்களில் கால நிலைக்கு அது வளர்வது அவ்வளவு எளிது அல்ல. ஷூபாவின் கணவர் சஞ்சீவ் குங்குமப்பூ பண்ணையின் உள்கட்டமைக்கு உதவினார். அவரது மகன் மற்றும் மருமகள் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷனில் உதவினார்கள்.
பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் மையன்புரி மாவட்டத்தில் ஷூபா சுபவ்னியை தொடங்கினார். சுபவ்னி ஸ்மார்ட்பார்ம்ஸ் ஏரோபோனிக் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குங்குமப்பூ வளர்ப்பை செய்து வருகிறார்கள். இது கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தாவரங்களை வளர்க்கும் முறையாகும். 560 சதுர அடி குளிர் அறையில் சரியான காலநிலை கொண்ட குளிரூட்டிகள், ஈரப்பதமூட்டிகள், co2 சென்சார்கள், அளவான சூட்டை கொடுக்கும் பல்புகள் போன்றவற்றை வைத்து குங்குமப்பூவை வளர்க்கிறார்கள். இந்த முறையில் மூலம் தூய்மையான பூச்சிக்கொல்லி இல்லாத குங்குமப்பூவை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
அப்படி வளர்க்கப்பட்ட குங்கும பூவை இன்ஸ்டாகிராம், whatsapp மற்றும் இ-காமர்ஸ் செயல்பாடுகள் மூலம் விற்பனை செய்கிறது. ஒரு கிராம் 750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குங்குமபூவை வளர்க்க ஆரம்பித்து ஒரு அறுவடை செய்ய மூன்று முதல் நான்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்று கூறுகிறார்கள்.
இந்த குங்குமப்பூ விவசாயத்திற்கான குளிர் அறையை அமைப்பதற்கு ஷூபா குடும்பத்தின் உதவியுடன் 26 லட்ச ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். முதல் ஆண்டில் சுபவ்னி சுமார் 10 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூவை விற்பனை செய்திருக்கிறார். கிராமப்புற பெண்களின் வேலை வாய்ப்புக்காக குங்குமப்பூவை உலர்த்தி பாக்கெட் செய்வதற்காக சுமார் 22 கிராமப்புற பெண்களை நிறுவனம் வேலைக்கு அமர்த்தி உள்ளது. காஷ்மீர் மற்றும் அல்லாமல் மற்ற இடத்தில் ஒரு அறையில் குங்குமபூவை வளர்க்க முடியுமா என்ற சந்தேகத்தை தீர்த்து வயது ஒரு பொருட்டல்ல என்று இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார் 64 வயதான உத்தரபிரதேச பெண்மணி ஷூபா.
தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…
அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…
செயற்கை நுண்ணறிவு (AI) மனித சமூகத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும், அண்மையில் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் வெளியிட்ட ஆய்வு…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வியாழக்கிழமை இரவு காவல் நிலையத்தில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில், 25 வயதான சொமாட்டோ…
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கிற்கு உட்பட்ட சித்தோங் பகுதிக்கு, சோப்ரா பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் தங்களது…
ரயிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பயணத்தின் போது 3 பேர் மட்டுமே…