Categories: சினிமா

வடிவேலு ஷூட்டிங்ல இந்த மாதிரியெல்லாம் பண்ணுவாரு… சுந்தர் சி ஓபன் டாக்…

Spread the love

சுந்தர் சி தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் நடிகராவார். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் பணியாற்றியிருக்கிறார். ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் சுந்தர் சி. இவரது இயற்பெயர் விநாயகர் சுந்தர் வேல் என்பதாகும். ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தனது சினிமா கேரியரை தொடங்கினார் சுந்தர் சி.

1995 ஆம் ஆண்டு முறைமாமன் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சுந்தர் சி. அதற்கு பிறகு நகைச்சுவை படங்களான உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி போன்ற திரைப்படங்களை இயக்கினார். 1997 ஆம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தின் மூலம் திருப்புமுனையை பெற்றார் சுந்தர் சி. மேலும் அருணாச்சலம் திரைப்படம் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து உன்னை கண் தேடுதே, அன்பே சிவம், வின்னர் போன்ற கமர்சியல் திரைப்படங்களை இயக்கினார் சுந்தர்சி. 2006 ஆம் ஆண்டு தலைநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து வீராப்பு, ஆயுதம் செய்வோம், ஐந்தாம் படை, குரு சிஷ்யன் போன்ற படங்களில் நடித்தார்.

2014 ஆம் ஆண்டு அரண்மனை திரைப்படத்தை இயக்கி அதில் நடித்தார் சுந்தர் சி. இந்த படம் நல்ல வரவேற்பு பெறவே தொடர்ந்து அரண்மனை 2, 3, 4 என நான்கு பாகங்களை இயக்கி இன்னும் தொடரும் என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காலில் கலந்து கொண்ட சுந்தர் சி வடிவேலு அவர்களை பற்றி பேசி இருக்கிறார்.

சுந்தர் சி கூறியது என்னவென்றால், வடிவேலு இயற்கையாகவே நகைச்சுவையான மனிதர். அவர் ஸ்கிரீன்ல காமெடி பண்ணும் போதே ஆடியன்ஸ் அப்படி பார்த்து சிரிப்பாங்க அது வேற விஷயம் ஏன்னா ஆடியான்ஸ்க்கு அடுத்து என்ன நடக்கும்னு தெரியாது. ஆனா நம்ம ஒரு படத்துல ஷூட்டிங் எடுக்கும்போது இதுதான் சீன் இப்படித்தான் வரப்போகுது அப்படின்னு எல்லாம் நம்ம தெரிஞ்சாலுமே ஒரு சில நேரத்துல வடிவேலு அன்ன்ஸ்பெக்டடா ஒரு ஆக்ட் பண்ணி செட்டில் இருக்கிறவங்களை சிரிக்க வைத்து விடுவாரு. அப்படி ஒரு திறமை வடிவேலு கிட்ட தான் இருக்கு என்று அவரைப் பற்றி பெருமிதமாக பேசியிருக்கிறார் சுந்தர் சி.

admin

Recent Posts

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

35 minutes ago

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

43 minutes ago

முதலீடா… இல்ல ரீல்ஸ் படப்பிடிப்பா?….. “தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள்”…. லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த TRB ராஜா…..!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…

1 மணத்தியாலம் ago