“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டிங் மிஷின் பிரிவில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். வழக்கம் போல் பணிக்குச் சென்று இயந்திரத்தில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது சேலை சுழலும் கட்டிங் இயந்திரத்தில் சிக்கியது. விநாடி பொழுதில் சேலையோடு சேர்த்து பாண்டியம்மாளையும் இயந்திரம் கொடூரமாக உட்புறமாக இழுத்துச் சென்றது.

இந்த கொடூர விபத்தில் அவரது கை துண்டிக்கப்பட்டு, உடலிலிருந்து அதிக அளவில் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சக தொழிலாளர்களின் அலறல் சத்தத்திற்கு இடையே பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சிவகாசி கிழக்குக் காவல் நிலையப் போலிஸார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“என்னால இருக்க முடியாது…” பாலத்திலிருந்து குதித்து இளைஞர்… சிக்கிய பரபரப்பு கடிதம்… காதல் தான் காரணமா…? மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…

14 minutes ago

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

50 minutes ago

முதலீடா… இல்ல ரீல்ஸ் படப்பிடிப்பா?….. “தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள்”…. லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த TRB ராஜா…..!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…

1 மணத்தியாலம் ago