சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அடிப்படை கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய அக்கட்சியின் தலைமை திட்டமிட்டு வருகிறது. தொகுதி வாரியாக மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 38 குழுக்களிடம் இருந்து தொண்டர்களின் புகார்களும் கோரிக்கைகளும் பெட்டி பெட்டியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, லண்டன் புறப்படுவதற்கு முன்பாக தங்கம் தென்னரசு, கனிமொழி, எழிலன் நாகநாதன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மறுசீரமைப்பு குழுவை ஸ்டாலின் அமைத்தார். இக்குழு வழங்கவுள்ள பரிந்துரையின்படி, திமுக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற புதிய திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. மேலும், மண்டலப் பொறுப்பாளர்கள் என்ற பதவி முழுமையாக ஒழிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞரணிக்கு மற்றொரு திறமையான இளைஞரை நியமிக்க உதயநிதி ஸ்டாலின் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவருக்குப் பதிலாக கட்சியின் முதன்மைச் செயலாளர் அல்லது பொருளாளர் போன்ற முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று பேசப்படுகிறது. மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்குப் பிறகு திமுகவின் மிக முக்கியப் பிரிவான இளைஞரணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி தற்போது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலினும் கனிமொழியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பியவுடன், இந்த மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கை அவரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் திமுகவின் முப்பெரும் விழாவுக்குப் பிறகு, இந்த அதிரடி மாற்றங்கள் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் இந்த உள்கட்டமைப்பு மாற்றம், வரவிருக்கும் அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்கும் கட்சியைப் பலப்படுத்துவதற்கும் ஒரு புதிய உத்வேகத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'பொன்னியின் செல்வன்', 'கட்டா குஸ்தி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துப் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், வழக்கு ஒன்றில் தொடர்புடைய கணவரைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற போலிஸ் படையினர், அங்கே…
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தர்ஷன் சோனாவனே என்ற வாலிபர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மறைந்த முன்னாள் துணை முதல்வர்…
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திரபுரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'இந்திரபுரி கே ராஜா' விநாயகர் பந்தல், 'காந்தாரா' திரைப்படத்தின்…
வழக்கமாக விநாயகப் பெருமானுக்கு லட்டு மற்றும் மோதகம் படைக்கப்படும் நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பக்தர்கள் "போபா டீ"…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…