வழக்கமாக விநாயகப் பெருமானுக்கு லட்டு மற்றும் மோதகம் படைக்கப்படும் நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பக்தர்கள் “போபா டீ” எனும் பானத்தை விநாயகருக்குப் படைக்கும் வினோதமான வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகின்றனர். பாங்காக்கின் முக்கிய வணிக வளாகத்திற்கு வெளியே உள்ள விநாயகர் சன்னதியில், பக்தர்கள் இந்திய முறைப்படி பாரம்பரிய இனிப்புகளுக்குப் பதிலாகத் தங்களுக்குப் பிடித்தமான போபா டீயை வாங்கி வந்து படைக்கின்றனர்.
பியா பிங் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள வீடியோ மூலம் இந்தத் தாய்லாந்து பண்பாட்டு வழக்கம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அங்குள்ள பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறினால், நன்றிக்கடனாக மீண்டும் அந்தச் சன்னதிக்கு வந்து அதிக அளவில் போபா டீ கப்-களைக் கொண்டு வந்து படைக்கின்றனர். முதற்கட்டமாக 3 கப் படைக்கும் பக்தர்கள், தங்கள் பிரார்த்தனைகள் பலிக்கும் போது 6, 12 என அதிகரித்து, சிலர் 200 கப்கள் வரை கூடப் படைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DdQOLfHBFqs/?utm_source=ig_web_button_share_sheet
இந்திய பாரம்பரிய வழிபாட்டு முறையும் தாய்லாந்து நாட்டின் உள்ளூர் கலாச்சாரமும் இணைந்து உருவான இந்த வித்தியாசமான முறை, சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கமான மோதகங்களுக்குப் பதிலாக போபா டீ படைக்கப்படுவதைப் பார்த்து இந்திய நெட்டிசன்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், வழக்கு ஒன்றில் தொடர்புடைய கணவரைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற போலிஸ் படையினர், அங்கே…
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தர்ஷன் சோனாவனே என்ற வாலிபர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மறைந்த முன்னாள் துணை முதல்வர்…
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திரபுரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'இந்திரபுரி கே ராஜா' விநாயகர் பந்தல், 'காந்தாரா' திரைப்படத்தின்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…
பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…