மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தர்ஷன் சோனாவனே என்ற வாலிபர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மறைந்த முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் உருவத்தை தச்சாக வடிவமைத்து, அவர் கணபதி பாப்பாவை கையில் ஏந்தி நிற்பது போன்ற சிலை அமைப்பை உருவாக்கியுள்ளார். சுமார் மூன்று மாத கடின உழைப்பில் தனது வீட்டில் உருவாக்கிய இந்த கலைப்படைப்பு, அஜித் பவாரின் நினைவுகளை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விநாயகர் சதுர்த்தி அமைப்பில், அஜித் பவார் கையில் விநாயகர் சிலையுடன் இருக்கும் பிரதான சிலைக்கு அருகே, அவர் உயிரிழந்த விமான விபத்தின் மாதிரிக் காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சோகமான விபத்து காட்சியை ஆன்மீக மற்றும் பண்டிகைக் காலத்தில் காட்சியாக வைத்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் இணையவாசிகளிடையே கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. பண்டிகை காலத்தில் விபத்து காட்சியை தவிர்த்திருக்கலாம் என சிலர் விமர்சித்தாலும், அஜித் பவாரின் ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் இதனை ஒரு உணர்வுப்பூர்வமான அஞ்சலியாகப் பார்க்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன்,…
ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில், ஆபத்தான ரகத்தைச் சேர்ந்த பிட்புல் வளர்ப்பு நாய் ஒன்று, 6 மாதமே ஆன கைக்…
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகிலுள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் அதிகாலை 5 மணி முதலே அதிர வைக்கும் ஒரு சம்பவம்…
ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த அனிதா பிந்த்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரபல மத்திய சந்தைப் பகுதியில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து தொழிலதிபர் ஒருவர் கட்டிய…
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட பிறகே பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று…