“ஷாக்… லண்டன் கனவு… ஒரு டெலிகிராம் மெசேஜ்…! 5.28 லட்சத்தை பறிகொடுத்த… தஞ்சை பட்டதாரி… பகீர் பின்னணி…!”

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பி.காம் பட்டதாரி ஜே.குமரேசனுக்கு டெலிகிராம் செயலி மூலம் லண்டனில் ஸ்டோர் கீப்பர் வேலை இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பிய அவரிடம் நேர்காணல், விசா, மருத்துவக் காப்பீடு மற்றும் குடியேற்றக் கட்டணம் எனப் பல்வேறு காரணங்களைக் கூறி, அடையாளம் தெரியாத மர்ம நபர் ரூ. 5,28,807 தொகையை 6 தவணைகளாக ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட பின் அந்த நபர் தனது செல்போனை அணைத்துவிட்டு ஏமாற்றியதால், குமரேசன் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிமதி தலைமையிலான சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், குமரேசன் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகள் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மோசடி கும்பலை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில், தஞ்சை கீழ வண்டிக்கார தெருவைச் சேர்ந்த லேத் பட்டறை தொழிலாளி நவீன் குமார் (47) என்பவர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி விடுதி முன்பு குடிபோதையில் மாணவிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து விடுதி வார்டன் லிங்கேஸ்வரி அளித்த புகாரின் பேரில், தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் குமாரை கைது செய்தனர்.

Swetha

Recent Posts

டேய்… என்னடா இது… விநாயகர் பக்கத்துல குளிகன் தெய்வமா?… போபாலில் காந்தாரா பாணி… பந்தலைப் பார்த்து மிரண்டுபோன பக்தர்கள்… இணையத்தில் வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திரபுரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'இந்திரபுரி கே ராஜா' விநாயகர் பந்தல், 'காந்தாரா' திரைப்படத்தின்…

4 minutes ago

என்னது… விநாயகருக்கு லட்டுக்கு பதிலா டீயா?… தாய்லாந்தில் அரங்கேறும் வினோத வழிபாடு… நெட்டிசன்களை வியக்கவைத்த சம்பவம்…!!

வழக்கமாக விநாயகப் பெருமானுக்கு லட்டு மற்றும் மோதகம் படைக்கப்படும் நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பக்தர்கள் "போபா டீ"…

11 minutes ago

“சாக்கடையில் மிதந்த சடலம்…” பிறந்தநாள் பார்ட்டியில் நுழைந்த போலீஸ்…. வாலிபரை அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…

23 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா… பேல் பூரி வியாபாரியை அடித்து நொறுக்கி… பொரியை ரோட்டில் கொட்டிய கொடூரம்… பீகார் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு…!!

பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…

24 minutes ago

“நான் ஆறுதலா இருப்பேன்…” நகை கடை அதிபரின் மகளுடன் நட்பு… மீண்டும் வந்த கணவர் கேட்ட ஒற்றை கேள்வி… போலீஸ் ஸ்டேஷனில் அழுது புலம்பிய பெண்…. பகீர் சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…

31 minutes ago

ஐயோ… இஸ்ரேல் தாக்கிய கட்டிடம்… திடீரென இடிந்து 5 குழந்தைகள் உட்பட… 20 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கிய பகீர் சோகம்…!!

காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…

32 minutes ago