“ஒரு சின்ன பிரச்சனைக்கு இப்படியா…?” சினிமா பாணியில் நடந்த சம்பவம்…! ரத்தம் சொட்ட நின்ற இருவர்…. பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு பேக்கரிக்கு முன், கார் ஓட்டுநர் நந்தகுமார் மற்றும் பைனான்ஸ் கலெக்சன் ஏஜென்ட் மாணிக்கம் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் லேசாக மோதியதில் சண்டை ஏற்பட்டது. முதலில் வாய்த்தகராறாக ஆரம்பித்த சண்டை, பின்னர் கைகலப்பாக மாறியது.

இந்தத் தகராறில் ஆத்திரமடைந்த நந்தகுமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேக்கரிக்குள் புகுந்த மாணிக்கத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணிக்கம், நந்தகுமாரிடமிருந்த அரிவாளைப் பறித்து பதிலுக்கு அவரையும் கடுமையாக வெட்டியிருக்கிறார்.

சினிமா பாணியில் நடந்த இந்தக் கொடூரச் சண்டையைக் கண்ட அங்கிருந்தவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மாணிக்கம் மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வாகனம் லேசாக உரசிய சிறிய சண்டைக்காக இருவரும் மாறி மாறி அரிவாளால் வெட்டிக்கொண்ட இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ஷாக்… நிமிடத்திற்கு நிமிடம் மரண பயம்…! 1 மணி நேரத்தில் பறிபோகும் 20 உயிர்கள்… போக்குவரத்து விதிமீறல்களால் கதிகலங்கும் இந்தியா…!!

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…

2 minutes ago

தமிழ்நாட்டில் இ-சேவை இணையதளம் திடீர் முடக்கம்…! சான்றிதழ்கள் வாங்க முடியாமல் ஸ்தம்பித்த மக்கள்… அதிர்ச்சி பின்னணி…!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…

11 minutes ago

“CM விஜய் சொன்ன ‘தூய சக்தி’ அரசியல் இதுதானா…?” – சொந்தக் கட்சியிலேயே வசூல் வேட்டை..?! கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன் அதிர்ச்சி குற்றச்சாட்டு…!!

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தமிழக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதற்கு,…

18 minutes ago

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

10 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

10 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

10 மணத்தியாலங்கள் ago