அப்போ எல்லாமே பொய் தானா.. விளம்பரத்துக்காக இப்படியா பண்றது..? மணிமேகலை – ஹுசைன் தம்பதியை விளாசும் நெட்டிசன்கள்..

By Sumathi

Updated on:

டிவி சேனல்களில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் மணிமேகலை. இவர் சமீபமாக, சரியாக பணிவாய்ப்பு இல்லாததால் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும், மிகவும் பணக்கஷ்டம் அவருக்கு இருப்பதாகவும், வீடு கட்டியதற்காக லோனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் இருப்பதாக கூறியதாகவும் ஒரு தகவல் பரவியது. இதற்கிடையே மணிமேகலை ஒரு வீடியோவை அவரே பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அவரது வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ போல அது தெரிகிறது.

   

அதில் மணிமேகலை கூறியிருப்பதாவது, வாழ்க்கையில் நாங்கள் இப்போது இருக்கும் நிலையை பார்த்தால் எல்லோருக்கும், இவர்கள் லைப்பில் செட்டில் ஆகி விட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மையில் அப்படியல்ல. நாங்கள் வாழ்க்கையில் நிறைய நிறைய கஷ்டங்களை, சிரமங்களை சந்தித்து இருக்கிறோம்.

பல விஷயங்கள் எங்களுக்கு பாசிட்டிவ் ஆக நடக்காமல் நெகட்டிவ் ஆக நடந்தது. சில விஷயங்கள் நாங்கள் எதிர்பார்க்காத மாதிரியும் நடந்தது. இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தியடைந்தோம். வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைய முடியாமல் மிகவும் அவதிப்பட்டோம்.

அப்போதுதான் என் அம்மா ஒரு அஸ்ட்ராலஜியை பார்க்குமாறு அட்வைஸ் செய்தார். அதன்படி நாங்கள் ஒரு ஆப்பில் சென்று குறிப்பிட்ட அந்த அஸ்ட்ராலஜியை சந்தித்து, எங்கள் பிறந்த நாள் தேதி, ஆண்டு, மாதம் இவற்றை மட்டுமே சொன்னோம். எங்கள் வாழ்க்கையில் இருந்த அத்தனை பிரச்னைகளையும் புட்டு புட்டு வைத்தார்கள். அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வாக ஒரே ஒரு விஷயத்தை 9 நாட்கள் மட்டும் செய்ய சொன்னார்கள்.

அதன்படியே செய்தோம். பிறகு பார்த்தால் எங்கள் வாழ்க்கை அப்படியே மொத்தமாக மாறிவிட்டது. நினைத்தபடி வாழும் ஒரு கனவு வாழ்க்கை இப்போது நிறைவேறிக் கொண்டு இருக்கிறது. அந்த அஸ்ட்ராலஜி ஆப் எங்களது டிஸ்கிரிப்சன் பாக்சில் தந்துள்ளோம் என கூறியிருக்கிறார். அதன்பிறகுதான், இது அந்த அஸ்ட்ராலஜி ஆப்பை விளம்பரப்படுத்துவதற்காக மணிமேகலை விட்ட புருடா என்பது, பலருக்கும் தெரிய வந்தது. இப்படி பொய் சொல்லி, மக்களை ஏமாற்றி விளம்பரம் செய்ய வேண்டுமா, என பலரும் மணிமேகலையை திட்டி வருகின்றனர்.

author avatar
Sumathi