தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் அந்த நேரத்தில் அரசியல் சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பும் ஒரு முதியவர் கதாபாத்திரத்தில் மற்றும் சாதாரண இளைஞன் கதாபாத்திரத்தில் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கமலஹாசன்.
ஊழலை எதிர்த்து சட்டத்தை எதிர்பார்க்காமல் தண்டனை கொடுக்கும் ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் இந்தியன் தாத்தாவாக கமலஹாசன் நடித்து அசத்தியிருப்பார். இதில் கமலுக்கு ஜோடியாக மனுஷா கொய்ராலா, சுகன்யா நடித்திருந்தார்கள். மேலும் செந்தில், கவுண்டமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
28 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் இரண்டாவது பகுதி தற்போது உருவாகி வருகிறது. நான்கு வருடத்திற்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் படபிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படபிடிப்பு தள்ளிப்போனது. அதைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு, கமலுக்கும் லைக்காவுக்கும் இடையே ஏற்பட்ட பஞ்சாயத்து என பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு வந்தது.
தற்போது எல்லாம் சமாதானமாகி கடந்த ஒரு வருடமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்களின் நடித்திருக்கின்றார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கின்றார். இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது ஜூலை மாதம் 17ஆம் தேதி இப்படத்தை வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏனென்றால் ஜூலை 17ஆம் தேதி மொஹரம் பண்டிகை வருகின்றது. அது புதன்கிழமை என்பதால் புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை இருப்பதால் வசூலை அள்ளிவிடலாம் என கணக்கு போட்டுள்ளது லைக்கா நிறுவனம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.