“அதிமுகவில் டிடிவி தினகரன்…?” – ஓப்பனாக கேட்ட நிர்வாகி… எடப்பாடி கொடுத்த ஷாக்கிங் பதில்…! டெல்டாவில் பெரும் அதிர்வு…!!

Spread the love

அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தஞ்சாவூர் மாநகர், கிழக்கு, மத்தியம், தெற்கு மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், அண்மைக் காலமாக அதிமுகவினர் மாற்றுப் கட்சிகளுக்கு மாறுவது குறித்தும், கட்சியைப் பலப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதிச் செயலாளர் பத்ம குமரேசன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தார். டி.டி.வி. தினகரனை கட்சியில் இணைத்தால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் பலம் பெறும் என்றும், இதன் மூலம் வரும் காலங்களில் அதிமுக நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் எண்ணத்தை அவர் எடப்பாடியிடம் சுட்டிக்காட்டினார்.

நிர்வாகிகளின் இந்தக் கோரிக்கையை அமைதியாகக் கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, “டி.டி.வி. தினகரன் தற்போது தனியாக ஒரு கட்சியை நடத்தி வருகிறாரே” என்று சுருக்கமாகப் பதில் அளித்துள்ளார். கூட்டம் முடிந்து வெளியே வந்த கும்பகோணம் பகுதிச் செயலாளர் பத்ம குமரேசன் இந்தத் தகவலைச் செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

Swetha

Recent Posts

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

13 minutes ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

15 minutes ago

“வெறும் ரூ100-க்காக இப்படியா…?!” கணவன் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…

24 minutes ago

பிரேசிலை வீழ்த்திய ஆவேசம்… ஆடை இல்லாமல் இருந்த ஹாலாந்தை கட்டிப்பிடித்த நார்வே இளவரசி… உடைமாற்றும் அறையில் பரபரப்பு…!

2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று-16 போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற…

25 minutes ago

“என் மகளுக்கு சுதந்திரம் தான் முக்கியம்…!” கல்யாண மேடையில் மணமகனின் அராஜகம்… திருமணத்தையே நிறுத்திய மாஸ் தந்தை…!”

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்…

31 minutes ago