“அடேங்கப்பா… 31 கி.மீ கடக்க 2.5 மணி நேரமா…?!” – பெங்களூரு டிராபிக்கில் சிக்கித் தவித்த இன்போசிஸ் இணை நிறுவனர்…! இணையத்தை உலுக்கும் பதிவு…!!

Spread the love

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம் ஆனதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் போக்குவரத்து நெரிசல், மோசமான சாலைகள் மற்றும் வாகன ஓட்டிகளின் ஒழுக்கமின்மை ஆகியவையே இந்த அவதிக்கு முதன்மைக் காரணம் என்று அவர் சாடியுள்ளார். இத்துணை பெரிய தொழில் அதிபருக்கே இந்த நிலைமை என்றதும், அவரது பதிவு இணையத்தில் படு வைரலாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இப்பதிவைக் கண்ட இணையவாசிகள் மற்றும் மென்பொருள் ஊழியர்கள் பலர், கிரிஸ் கோபாலகிருஷ்ணனின் கருத்தை ஆமோதித்ததோடு நில்லாமல், இதற்கு தீர்வாக இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் முழுமையாக ‘ஹைப்ரிட் பணி முறைக்கு’ மாற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பெருநகரங்களில் நிலவும் இத்தகைய போக்குவரத்து நெரிசலுக்கு, நிறுவனங்கள் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி ‘அலுவலகத்திலிருந்து பணிபுரிய’ வைப்பதே முக்கியக் காரணம் என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பூங்கா நகரம், சிலிக்கான் சிட்டி எனப் புகழப்படும் பெங்களூரு, கடந்த தசாப்தத்தில் மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் என்ற அவப்பெயரையும் பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மெட்ரோ ரயில் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தினாலும், அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கைக்கு அது ஈடுகொடுக்கவில்லை. உலக அளவில் அதிக நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இரண்டாம் இடத்தில் உள்ளதாகத் தரவுகள் குறிப்பிடும் நிலையில், இதற்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஒரு நிரந்தர நீண்டகால தீர்வை காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Swetha

Recent Posts

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

2 minutes ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

4 minutes ago

“வெறும் ரூ100-க்காக இப்படியா…?!” கணவன் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…

13 minutes ago

பிரேசிலை வீழ்த்திய ஆவேசம்… ஆடை இல்லாமல் இருந்த ஹாலாந்தை கட்டிப்பிடித்த நார்வே இளவரசி… உடைமாற்றும் அறையில் பரபரப்பு…!

2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று-16 போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற…

14 minutes ago

“என் மகளுக்கு சுதந்திரம் தான் முக்கியம்…!” கல்யாண மேடையில் மணமகனின் அராஜகம்… திருமணத்தையே நிறுத்திய மாஸ் தந்தை…!”

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்…

20 minutes ago

காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் நேர்ந்த கொடூரம்… 20 லட்சம் வரதட்சணைக்காக பறிபோன இளம் பெண்ணின் உயிர்… டெல்லியை உலுக்கிய மர்ம மரணம்…!

டெல்லியில் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ஆக்ரிதி (28) என்ற இளம் பெண், லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு…

22 minutes ago