உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு தேவஸ்தானம் சார்பில் பல சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. தற்போது திருப்பதி ஏழுமலையானை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைன் தரிசன டிக்கெட் நவம்பர் 18 இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அதேபோல கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட் நவம்பர் 21ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதேசேவைக்கு நேரடியாக சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும் விர்ச்சுவல் சேவைக்கு நவம்பர் 21ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் நவம்பர் 24ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் நன்கொடை செலுத்தி 500 ரூபாய் விஐபி தரிசன டிக்கெட் பெற நவம்பர் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் நவம்பர் 24ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அதேபோல 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிஹோரி சுங்கச்சாவடி அருகே ஜூன் 26 அன்று அதிகாலை நிகழ்ந்த லாரிக்…
சீர்காழி அருகே பள்ளிக்குச் செல்லும் தனது அக்காக்களை வழிஅனுப்ப தாயுடன் வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை மகிழ்வேலன், பள்ளி…
விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…
இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…
'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…
சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…