இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் பதிவு செய்த இந்த வீடியோவில், கண் பார்வையை இழந்த முதியவர் ஒருவர் பேருந்தில் தளர்ந்த கைப்பிடியை அமைதியாக சரி செய்யும் தருணம் பதிவாகியுள்ளது.
அவருடைய செயல்தான் சமூக வலைத்தளத்தில் மனிதநேயம் என்ற வார்த்தைக்கு புதிய வரையறையை அளித்துள்ளது. பயணத்தின் போது கைப்பிடி தளர்ந்து இருப்பதை கண்ட அந்த முதியவர் நானும் ஒரு பயணி என்ற பொறுப்புணர்வுடன் அதனை சரி செய்வது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பொது சொத்துக்கு தனிப்பட்ட பொறுப்புணர்வு கொண்டு நடந்து கொள்ளும் இந்த செயல்முறை பலரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு சாதாரண குடிமகன் செய்த இந்த ஒரு சின்ன செயல் பெரிய பாடமாக மாறி உள்ளது. கண்பார்வையற்ற முதியவர் இப்படி ஒரு செயலை செய்தது சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கானோரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக அரசியல் களம் ஆட்சி கவிழ்ப்பு சதி, அவதூறு பேச்சுக்கள் மற்றும் அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் தினந்தோறும் பரபரப்பின் உச்சத்தில்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை,…
தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், தற்போதைய தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான…