“விரைவில் நடக்கவிருந்த திருமணம்.. காதலி வீட்டில் காதலனுக்கு நேர்ந்த சோகம்.. ஒரு நிமிட விரக்தியால் நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் பின்னணி”..!!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாற, கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டி திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தனர். இருப்பினும், ஏதோ சில காரணங்களால் இவர்களின் திருமணம் நடப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக தீபக் கடந்த சில நாட்களாகவே கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது காதலியின் அலுவலகத்திற்குச் சென்ற தீபக், அவரை அழைத்துக் கொண்டு காதலியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீபக், படுக்கை அறைக்குச் சென்று அங்கிருந்த மின்விசிறியில் காதலியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அறைக்குள் சென்று பார்த்த காதலி, தீபக் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இச்சம்பவம் குறித்து அயப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

FLASH: திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பதவியில் இருந்து விலகல்.. உதயநிதிக்கு பலத்த அடி..!!

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…

3 minutes ago

“சுற்றி இருக்கும் 10 பேர் கொண்ட கும்பல் உருவாக்கிய மாயை” – திமுகவை அதிரடியாக வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர்…!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…

9 minutes ago

“‘யாருக்கு அனுமதி கொடுத்தீங்க?’.. துறவிகள் வேடத்தில் வந்து இளம் தம்பதியை துரத்தி துரத்தி அடித்த கும்பல்.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யான் பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நபர்கள் கும்பலால் இளம்…

11 minutes ago

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு!.. காற்றில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.. கார் ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. நெஞ்சை உலுக்கும் CCTV வீடியோ.!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை அதன் ஓட்டுநர் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் திடீரெனத்…

21 minutes ago

“அதிமுக கூடாரமே காலி?”… விஜய்யின் ‘ஆபரேஷன் பனையூர்’ – சிக்கிய 5 முக்கிய முதலைகள்…. எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

தமிழக அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி அரசியல் வியூகங்களால் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. நடந்து…

24 minutes ago

எம்.ஜி.ஆர் வழியில் CM விஜய்… இனி இவங்களுக்கு கல்தா?… தமிழக அரசியலை உலுக்கும் தளபதியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்…. மிரண்டு போன திமுக பிரமுகர்கள்….!

தமிழகத்தில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர். பாணியில், அதிகாரிகள் மூலமாகவே உள்ளாட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்க…

29 minutes ago