வீட்டுக்குள்ளேயே வெடித்த டைம் பாம்… நச்சுப் புகையால் மூச்சுத்திணறி தந்தை மரணம்… மகன் நிலைமை?… தடயவியல் சோதனையில் வெளியான பகீர் உண்மை…!

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள சக்ரதர் நகர் பகுதியில், நள்ளிரவில் வீட்டின் ஜன்னல் ஏசி கம்ப்ரெஸர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது ஒரே மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அம்பேத்கர் அவாஸ் காலனியில் வசித்து வந்த புருஷோத்தம் படேல் (38) மற்றும் அவரது மகன் ராஜ்பீர் படேல் (19) ஆகியோர், கடந்த ஜூன் 24-ஆம் தேதி இரவு வழக்கம்போல தங்களது அறையில் ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்கியுள்ளனர். அதிகாலை சுமார் 4:30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏசி கம்ப்ரெஸர் வெடித்ததில், அறையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கும் தீ பரவி, வீடு முழுவதும் நச்சுப் புகை சூழ்ந்தது. இதனால் தப்பிக்க வழியின்றி இருவரும் அறைக்குள்ளேயே மயக்கமடைந்தனர்.

பயங்கர சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அண்டை வீட்டார், உடனடியாக ‘டயல் 112’ அவசர சேவைக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பொதுமக்களின் உதவியுடன் கதவை உடைத்து மயக்க நிலையில் இருந்த இருவரையும் மீட்டனர். உடனடியாக அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு புருஷோத்தம் படேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். புகையினால் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவரது மகன் ராஜ்பீர் படேல், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதற்கட்ட தடயவியல் சோதனையில் ஏசி கம்ப்ரெஸர் வெடித்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Visaka

Share
Published by
Visaka

Recent Posts

“பூவைச் செடியில் இருந்து கிள்ளினால் மட்டும் வாடாது”பாக்யராஜை அந்த வார்த்தை சொல்லி… மேடையில் பாரதிராஜா கலங்கிய நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது குருவான புகழ்பெற்ற…

10 minutes ago

“பெண் பிள்ளைகளைப் பெக்காதீங்க…” வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு DNA டெஸ்ட் கேட்ட கணவன்… கொடுமை தாங்காமல் கர்ப்பிணி தற்கொலை… வேதனையில் கதறும் தாய்..!!

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் அல்லாதுர்க்கைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும், சுஷ்மிதா என்பவருக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

17 minutes ago

அடக்கடவுளே..! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி: பைக்கில் சென்றவர் மீது திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை… உயிருக்கு போராடும் அவலம்..!!

பெங்களூருவின் ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 53 வயது நபர் மீது காய்ந்த…

22 minutes ago

“மகன் திமுக” இதேபோல 2 வருஷம் கழிச்சி… அதை சொல்லி தவெகவில் இருந்து வெளியேருவாங்க… முன்னாள் மதிமுக பிரமுகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சாடல்..!!

மதிமுக திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ள அரசியல் சூழலில் , முன்னாள் மதிமுக பிரமுகர் கே.…

32 minutes ago