Connect with us

CINEMA

ஒரே படத்தில் அதிக கேரக்டருக்கு பேசப்பட்ட டப்பிங்.. ஆடுகளம் படத்தில் இந்த கேரக்டருக்கு டப்பிங் செய்தது வெற்றி மாறனா..

சினிமாக்களில் பொதுவாக நடிகர்கள் மிகத் திறமைசாலியாக இருந்தாலும் குரல்வளை அமைப்பு கதாபாத்திரத்திற்கு சரியாக ஒத்துப் போகாமல் இருப்பதால் அதிகமாக அவர்கள் பேசும் டயலாக் சொந்த நடிகர்களின் குரலை வைப்பதற்கு பதிலாக மற்ற டப்பிங் ஆர்டிஸ்ட் ஒருவரை போடுவது வழக்கம். இதற்கு காரணம் என்னவென்றால் அப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் வேறு மொழிக்காரர்களாக இருக்கலாம், அல்லது அவர்களுக்கு சரியாக டயலாக் பேச வராமல் இருக்கலாம், இல்லையென்றால் அந்த கதாபாத்திரத்தின் தோரணைக்கு செட் ஆகாமல் இருக்கலாம், ஆகையால் இதற்கு ஒத்துப் போகும் விதமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வைத்து டப்பிங் செய்து திரைக்கு கொண்டு வருவது ஒரு வழக்கமான விஷயம் தான்.

அப்படி தமிழ் சினிமாக்களில் சில படத்தில் மட்டும் உள்ளே கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு மட்டும் மற்றவர்களின் குரலை வைத்து டப்பிங் செய்த படங்கள் இருக்கிறது. அதில் ஆடுகளம் மற்றும் இந்தியன் படத்திற்கு நடித்துள்ள பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வைத்து டப்பிங் செய்துள்ளார்கள். ஆடுகளம்: படத்தில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்த வி.ஐ.எஸ் ஜெயபாலனுக்கு ராதாரவி அவர்கள் டப்பிங் செய்துள்ளார். சென்றாயன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அந்த கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்தது வெற்றிமாறன் அவர்கள். இப்படத்தின் ஹீரோயினான டாக்சி அவர்களுக்கு டப்பிங் செய்தது ஆண்ட்ரியா அவர்கள். கிஷோருக்கு சமுத்திரகனி பேசி இருப்பார். இப்படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு எல்லாம் இவ்வளவு அதிகமான டப்பிங் ஆர்டிஸ்ட் பேசி உள்ளார்கள்.

   

அடுத்ததாக இந்தியன்: இப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஊர்மிளாவுக்கு பானுப்பிரியா அவர்கள் பேசி உள்ளார். நெடுமுடி வேலுக்கு நாசர் அவர்கள் பேசியுள்ளார். ஹீரோயினாக நடித்த மனிஷா கொய்ராலாவுக்கு ரோகிணி பேசி உள்ளார். இப்படத்தில் டாக்டர் வேடத்தில் வரும் சின்ன கதாபாத்திரத்திற்கு எம்.எஸ் பாஸ்கர் பேசியிருந்தார். இப்படத்தில் கமல்ஹாசன் எல்லா டப்பிங் முடித்துவிட்டு சென்றிருக்கிறார். தற்போது ஒரு சின்ன இடத்தில் டப்பிங் செய்ய வேண்டும் என்று எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கமலின் சின்ன காட்சியில் சின்ன டயலாக்கை பேசியுள்ளார். இது போன்ற பல படங்களில் பல பிரபலங்களுக்கு அதிகப்படியான வாய்ஸ் கொடுப்பது டப்பிங் ஆர்டிஸ்டே ஆகும்.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in CINEMA

To Top