‘என்ன நெனச்சிட்டு இருக்கார்.. என் டைம் ரெண்டு மாசம் வேஸ்ட்’ – ரஜினியின் செயலால் கோபத்தில் கத்திய கிரேஸி மோகன்!

By vinoth on வைகாசி 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்‌ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

இதற்கிடையில் அவர் தலைநகரம் திரைப்படத்தின் மூலமாக நடிகர் ஆனார். அந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் படங்கள் சரியாக ஓடாத போது மீண்டும் கலகலப்பு படம் மூலமாக இயக்குனர் ஆனார். அதன் பின்னர் நடிப்பு இயக்கம் என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வருகிறார். கடந்த வாரம் அவர் இயக்கத்தில் உருவான அரண்மனை 4 மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

   

தற்போது இருக்கும் இயக்குனர்களில் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் மிக இளம் வயதில் இயக்கிய இயக்குனர் என்ற பெருமைக்குரியவர் சுந்தர் சி. ரஜினியை வைத்து அவர் 1998 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் அருணாச்சலம். இந்த படத்தை ரஜினிகாந்தே தயாரித்திருந்தார். படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியிருந்தார்.

   

இந்த பட உருவாக்கத்தின் போது திடீரென ஒரு நாள் சுந்தர் சி மற்றும் கிரேஸி மோகன் ஆகிய இருவரையும் அழைத்த ரஜினி “இப்போதைக்கு நான் படம் பண்ண வேண்டாம் என்று நினைக்கிறேன். அதனால் இப்போதைக்கு அருணாச்சலம் படத்தை தொடங்க முடியாது என சொல்லி அனுப்பிவிட்டார். இதைக் கேட்டு கடுப்பான கிரேஸி மோகன், ‘என்ன நெனச்சிட்டு இருக்காரு. ரெண்டு மாசம் கஷ்டப்பட்டு கதை எழுதினா சட்டுனு படம் பண்ணலன்னு சொல்லிட்டாரு. என்ன தான் நெனச்சிட்டு இருக்காரு’ எனக் கோபமாக கத்திவிட்டார்.” என தெரிவித்துள்ளார்.

 

ஆனால் அதன் பின்னர் அருணாச்சலம் படம் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.