தமிழக அரசு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, ரூ.10 விலையில் ‘பயணி’ என்ற பெயரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இத்திட்டத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி வைத்தார். நீண்ட தூரப் பயணங்களின் போது பயணிகளுக்குக் குறைந்த விலையில் தரமான குடிநீர் எளிதாகக் கிடைப்பதை இத்திட்டம் உறுதி செய்கிறது.
இந்த அறிமுக விழாவின் போது, போக்குவரத்துக் கழகங்களில் பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன. அதன்படி, மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 16 பேருக்கு நடத்துநர் பணியும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஓட்டுநருடன் கூடிய நடத்துநர் பணியும் என மொத்தம் 17 பேருக்கு அமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்.
மேலும், பேருந்து பயணத்தின் போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பெண் பயணிகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து மனிதாபிமானத்துடன் செயல்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். கடலூர் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் சுமேஷ், நடத்துநர் பாரதி மற்றும் பெரியகுளம் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் நாகராஜன், நடத்துநர் செல்லதுரை ஆகியோரின் நற்செயலைப் பாராட்டிய அமைச்சர், தனது சொந்த சம்பளத்திலிருந்து அவர்கள் நால்வருக்கும் தலா ரூ.5,000 வழங்கி கௌரவித்தார்.
நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் பெற்ற ரூ.2 கோடி கடனைத் திருப்பிச் செலுத்த வழங்கிய…
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீ சைதன்யா ஜூனியர் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த அரவிந்த் (15) என்ற…
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் தனது நிலத்தை அடமானம் வைத்து, அதே…
இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை மிகக் கொடூரமான முறையில் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும்…
தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற விவாதங்களின்போது, தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூரில், 95 வயதான பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது 35 பேரன்மார்கள் இணைந்து அவரை பல்லக்கில் சுமந்து…