வட துருவப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள நார்வே நாட்டின் லாங்கியர்பியன் என்ற நகரத்தில், மனிதர்கள் இறப்பதற்கும் உடல்களைப் புதைப்பதற்கும் சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் நிலவும் உறைபனி மற்றும் கடுமையான குளிர்காரணமாக, இங்குப் புதைக்கப்படும் மனித உடல்கள் இயற்கையாக மக்கிப் போகாமல் பல ஆண்டுகள் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன. இதனால், பல ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட உடல்களில் இருக்கும் ஸ்பானிஷ் ஃப்ளூ போன்ற ஆபத்தான வைரஸ்கள் அழியாமல் மீண்டும் பரவி, பொதுமக்களுக்குப் பெரும் நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் எனக் கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக, சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 1950-ஆம் ஆண்டு முதல் அங்கு உடல்களைப் புதைப்பதற்கு அந்நாட்டு நிர்வாகம் முழுமையாகத் தடை விதித்தது. இந்த விதிமுறையின்படி, அந்த நகரில் யாரேனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வயது முதிர்வின் காரணமாக மரணத்தின் விளிம்பிற்குச் சென்றாலோ, அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காகவும் இறுதிச் சடங்குகளுக்காகவும் நார்வேயின் பிரதான நிலப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதேபோல போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், பிரசவ நிலையை அடையும் கர்ப்பிணிப் பெண்களும் பிரசவத்திற்கு முன்பே பிரதான நிலப்பரப்பிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் பெற்ற ரூ.2 கோடி கடனைத் திருப்பிச் செலுத்த வழங்கிய…
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீ சைதன்யா ஜூனியர் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த அரவிந்த் (15) என்ற…
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் தனது நிலத்தை அடமானம் வைத்து, அதே…
இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை மிகக் கொடூரமான முறையில் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும்…
தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற விவாதங்களின்போது, தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூரில், 95 வயதான பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது 35 பேரன்மார்கள் இணைந்து அவரை பல்லக்கில் சுமந்து…