சென்னையில் தாக்கியுள்ள மிக்ஸாம் புயலால் பல குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மக்கள் தற்பொழுது பெரும் துயரத்தில் அல்லல்பட்டு வருகின்றனர். குடிக்க தண்ணீர் இன்றி, சாப்பிட உணவு இன்றி, மின்சாரமின்றி என பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மட்டும் அல்ல. வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தற்பொழுது தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு வெளியில் தண்ணீர் கடல் போல் தேங்கியுள்ளது. இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி பல முக்கிய சினிமா நட்சத்திரங்களும் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது மொட்டை மாடியில் இருந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டு உதவி கேட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து மீட்பு படையினர் அவரை விரைவாக மீட்டனர். அவருடைய வீட்டில் இருந்த நடிகர் அமீர் கானையும் மீட்டனர். இந்நிலையில் நடிகை ஆத்மிகா தான் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறி உதவி கேட்டு ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஆத்மிகா.
இவர் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். ‘மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அவர் தற்பொழுது ‘ நான் இருக்கும் காரப்பாக்கம் ஏரியாவில் தண்ணீர் அளவு குறையவில்லை. மின்சாரம், நெட்ஒர்க், குடிக்க தண்ணீர் எதுவும் இல்லை. இந்த பதிவு சரியான அதிகாரிகளை சென்றடையும் என நம்புகிறேன். மாடிக்கு வந்தால் தான் கொஞ்சம் நெட்ஒர்க் கிடைக்கிறது’ என்று கூறியுள்ளார். இதோ அந்த பதிவு….
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…
மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…
இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…
கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…