Categories: சினிமா

வெள்ளத்தில் சிக்கித்தவித்த நடிகர் அமீர் கான் & விஷ்ணு விஷாலை படகின் மூலம் பத்திரமாக மீட்ட குழுவினர்…

Spread the love

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக  கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தற்பொழுது சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. பெரும்பாலான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. நேற்றிலிருந்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மக்களின்  இயல்பு வாழ்க்கையை இந்த புயல் பெரிதும் பாதித்துள்ளது. கரண்ட் இல்லாமல், சாப்பிட குடிக்க தண்ணீர் இல்லாமல், உணவு கூட கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி மழை நீர் அனைத்து தெருக்களிலும்,  சாலைகளிலும் குளங்கள் போல காட்சி அளித்து வருகிறது.

பல்வேறு வீடுகளிலும் இடுப்பு அளவிற்கு மழைநீர் தேங்கி  நிற்பதை நாம் பார்த்து வருகிறோம். சாதாரண மக்களுக்குத்தான் இந்த நிலைமை என்றால், பிரபலங்களும் இதில் சிக்கியுள்ளனர். பிரபல நடிகரான விஷ்ணு விஷால் இன்று வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில் அவர்  ‘காரப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் மழை நீர் புகுந்து விட்டதாகவும், அது அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் கூறியுள்ளார். மேலும் உதவி கேட்டும் கோரிக்கை வைத்துள்ளார். கரண்ட் மற்றும் போனில் சிக்னல் இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், தனது மொட்டை மாடியில் நின்று சில புகைப்படங்களை மட்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உதவிகேட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் தங்கியிருக்கும் காரப்பாக்கம் பகுதிக்கு சென்ற தீயணைப்பு படையினர் விஷ்ணு விஷால் அவரது மனைவி ஜுவாலா கட்டாவை மீட்டு படகில் கொண்டு வந்தனர். அந்த படகில் பிரபல நடிகர் ஆமிர் கானும் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டார். இப்புகைப்படங்களை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

17 minutes ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

25 minutes ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

31 minutes ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

43 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

1 மணத்தியாலம் ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

1 மணத்தியாலம் ago