“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து, பலமுறை எச்சரித்தும் கண்ணன் காதலைக் கைவிட மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாரதிராஜா, கண்ணனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து தனது நண்பர்களான வசந்தகுமார், மணிகண்டன் ஆகியோரின் உதவியுடன் கடந்த ஜூன் 11-ஆம் தேதி அவரை ஒரு தோட்டத்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்களான ருத்தீஷ், நசீர் உசேன் ஆகியோர் சேர்ந்து, தங்கையைக் காதலித்தது குறித்து கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். உறவை கைவிட கண்ணன் மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவர்கள் கண்ணனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, கொலையை மறைப்பதற்காக அவரது உடலை அருகில் இருந்த ஒரு தோட்டக் கிணற்றில் வீசிவிட்டு அனைவரும் தப்பியோடினர்.

கடந்த ஜூன் 13-ஆம் தேதி மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிணற்றில் கண்ணனின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கண்ணன் கடைசியாகச் சென்ற நண்பர்களைக் கொண்டு கொலையின் பின்னணி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய பாரதிராஜா, ருத்தீஷ், வசந்தகுமார் மற்றும் நசீர் உசேன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மணிகண்டனைத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Swetha

Recent Posts

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

2 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

6 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

11 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…

15 minutes ago

அடுத்த பரபரப்பு.. எம்.எல்.ஏ பதவி காலி?… மொத்த கோட்டையோடு தவெக-வுக்கு தாவும் விஜயபாஸ்கர்?… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்….!

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…

20 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் – உதயநிதி ரகசிய கூட்டணி?”…. இதுவரை தமிழக அரசியல் கண்டிராத அந்த ‘ஒரு’ சம்பவம்.. அலறும் அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்…!

தமிழக அரசியலில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பரஸ்பர அரசியல் பகைமைத் தடையை உடைத்து, தற்போதைய முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சித்…

26 minutes ago