எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் மூலம் தமிழில் அறிமுகமான கேரள நடிகை அசின். முன்னணி ஹீரோக்கள் கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்றவர்களுடன் நடித்த இவர், தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார். புகழின் உச்சத்தில் இவர் திடீரென மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துள்ள மிகப்பெரிய தொழிலதிபரை அசின், கணவராக அடைந்ததே ஒரு சுவாரசியமான கதைதான்.
தமிழை தொடர்ந்து இந்தியில் நடித்த அசினுக்கு, நடிகர் அக்ஷய்குமார் மூலம் ஒரு பங்க்ஷனில்தான் ராகுல் சர்மா அறிமுகமானார். அவர் யாரென்றே தெரியாமல் அவருடன் கொஞ்சநேரம் அசின் ஜாலியாக பேசி இருக்கிறார். பிறகு அக்ஷய்குமாரிடம் கேட்ட போது, அவர்தான் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ என கூறியிருக்கிறார். அதன்பின்பு தான் அசினுக்கு, ராகுல் சர்மா மீது அதிக காதல் ஏற்பட்டு இருக்கிறது. கஜினி படத்தில் ஏர்வாய்ஸ் என்ற பெரிய மொபைல் போன் நிறுவனத்தின் முதலாளி என தெரியாமல் சூர்யாவை, அசின் காதலிப்பது போலவே அவரது நிஜவாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
ராகுல் சர்மா, பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்ளாதவர். மீடியாக்களிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவர் என்ற நிலையில், அசின் அவரை யார் என்ற கேட்ட விஷயம், அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி, இருவருக்கும் நட்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிறகு நட்பு காதலாகி, திருமணமாகி இப்போது கணவர், பிள்ளையுடன் அசின் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகளையும் அசின்தான் இப்போது கவனித்துக் கொள்கிறார். சாதாரண நடிகையாக துவங்கிய வாழ்க்கை, இன்று 1300 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக மைக்ரோமேக்ஸ் நிறுவன உரிமையாளராக அசினை மாற்றி இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…
தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் வடக்கு…
டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்…