“சேலத்தில் பரபரப்பு… தூய்மைப் பணியாளர் காலில் விழுந்த தமிழக அமைச்சர்…! மேடையில் உறைந்து போன தொண்டர்கள் – பின்னணி என்ன…?”

Spread the love

தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் வடக்கு ஒன்றிய தவெக சார்பில் 1,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. விஜய் தமிழன் பார்த்திபன், சமூகத்தைத் தூய்மையாக வைக்கும் பணியாளர்களைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு வாழ்வாதாரப் பொருட்களை வழங்கினார்.

அப்போது மேடைக்கு வந்த வயதான ஆண் தூய்மைப் பணியாளர் ஒருவர், அமைச்சரிடம் இருந்து பொருட்களைப் பெற்றுக் கொண்ட நெகிழ்ச்சியில் திடீரென அவரது காலில் விழுந்து வணங்க முற்பட்டார். வயதில் மூத்தவர் தன் காலில் விழுவதைக் கண்டு பதறிய அமைச்சர், அவரை உடனடியாகத் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கூட்டமும் வியக்கும் வண்ணம் பதிலுக்கு அந்தத் தூய்மைப் பணியாளரின் காலில் விழுந்து வணங்கினார். அமைச்சரின் இந்த எதிர்பாராத பண்பான செயலால் அந்த எளிய பணியாளர் நிலைகுலைந்து கண்கலங்கினார், மேலும் அங்கிருந்த பொதுமக்களும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து மைக்கில் பேசிய அமைச்சர், “தயவுசெய்து இனி யாரும் என் காலில் விழ வேண்டாம், நாமெல்லாம் மக்கள் சேவகர்கள்; சமூகத்தைத் தூய்மைப்படுத்தும் உங்களைப் போன்ற நடமாடும் தெய்வங்களின் காலில் விழுந்து ஆசி பெறுவதே பெருமை” என்று கனிவுடன் வேண்டுகோள் விடுத்தார். அரசியல்வாதிகள் காலில் மக்கள் விழும் கலாச்சாரம் பரவலாக உள்ள நிலையில், எளிய தூய்மைப் பணியாளருக்கு அமைச்சர் அளித்த இந்த மரியாதை மாற்று அரசியலின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அயோத்தியாபட்டினத்தில் நடந்த இந்நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வேளையில், கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் அமைச்சரின் இந்த எளிய குணத்திற்குப் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

6 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

28 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

39 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

44 minutes ago

“ஷூட்டிங் வரமாட்டேன்…” 28 ஆண்டுகளாக தீராத.. பார்த்திபன்- சேரன் சண்டை… எதனால் பிரச்சனை…? இணையத்தில் வைரலாகும் பழைய மோதல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…

53 minutes ago

“சூப்பரா பேசுனீங்க” இபிஎஸ்-ஐ மீறி முதல்வர் விஜய்யை நேரில் பாராட்டிய எஸ்பி வேலுமணி.. ஆடிப்போன அரசியல் களம்..!!

தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…

54 minutes ago