உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கங்னானி பகுதிக்கு அப்பால் உள்ள டப்ரானி அருகே சென்றுகொண்டிருந்த இனோவா கார், எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஆற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் படேல் அசோக்பென் (49), ரூதிகா அசோக்பாய் படேல் (19), கன்ஷ்யாம்பாய் சர்வாலியா (32) மற்றும் காரின் ஓட்டுநரான ஹரித்வாரைச் சேர்ந்த சுரேந்திர சிங் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் 17 வயதான படேல் வேதாந்த் அசோக்பாய் என்ற சிறுவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆர்யாவின் உத்தரவின் பேரில் காவல் துறை, எஸ்டிஆர்எஃப் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆற்று வெள்ளத்தில் வேறு யாரேனும் அடித்துச் செல்லப்பட்டார்களா என்பதைக் கண்டறியத் டைவர்ஸ் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…