கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் பிரபு – குஷ்பு. தர்மத்தின் தலைவன், வெற்றிவிழா, மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, கிழக்குகரை, உத்தமராசா, பாண்டித்துரை என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தனர். ஒரு கட்டத்தில் குஷ்பு – பிரபு இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக, முன்னணி தமிழ் நாளிதழில் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக புகைப்படத்துடன் வந்தது. இது தமிழ் சினிமாவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் ஏற்கனவே பிரபு திருமணமானவர். அவரது மனைவி பெயர் புவனா. பிள்ளைகளும் இருந்தனர். அதுவும் சிவாஜி கணேசனுக்கு நடிகை குஷ்பு மருமகளா என்ற சர்ச்சையும் எழுந்தது.
ஆனால் இது வதந்தி என்றும், பத்திரிகையில் பரபரப்புக்காக இந்த தவறான செய்தி வந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் குஷ்பு, பிரபு தரப்பில் இருந்தே இந்த செய்தி தரப்பட்டதாகவும், இது பொய்யான செய்தி இல்லை என பத்திரிகை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விவகாரத்துக்கு பிறகு குஷ்பு – பிரபு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் பேசிக்கொள்வது இல்லை என இருந்தனர். ஆனால், சுந்தர் சியை குஷ்பு திருமணம் செய்து, இப்போது பல ஆண்டுகள் கடந்த நிலையில் பிரபு- குஷ்பு பொது இடங்களில் பார்க்க நேர்ந்தால் சகஜமாக, நண்பர்களாக பேசிக்கொள்கின்றனர்.
ஆனால், 1990களில் குஷ்பு – பிரபு திருமணம் நடந்தது குறித்து சினிமா விமர்சகர் டாக்டர் காந்தராஜ், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், ஒரு பெரிய முன்னணி தமிழ் நாளிதழில், அதுவும் முதல்பக்க தலைப்பு செய்தியாக பிரபு -குஷ்பு திருமணம் நடந்தது என வந்தது. அது பொய்யாக இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால், பொய் செய்தி என்றால் அந்த பத்திரிகையின் நம்பக தன்மையே போய்விடும். அதனால் நடந்த திருமணத்தை பொய் என்றும், வதந்தி என்றும் மறைக்க காரணம், பிரபுவின் மனைவி குடும்பத்தார் செய்த பிரச்னைகள்தான். அதன்காரணமாக பிரபு குஷ்புவை விட்டு விலகியிருக்கலாம், என்று கூறியிருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…