‘கஜினி’ படம் போலவே நடந்த அசினின் நிஜ வாழ்க்கை.. 1300 கோடிக்கு அதிபதியான தொழிலதிபரை மணந்தது எப்படி..?

By admin on கார்த்திகை 16, 2023

Spread the love

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் மூலம் தமிழில் அறிமுகமான கேரள நடிகை அசின். முன்னணி ஹீரோக்கள் கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்றவர்களுடன் நடித்த இவர், தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார். புகழின் உச்சத்தில் இவர் திடீரென மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துள்ள மிகப்பெரிய தொழிலதிபரை அசின், கணவராக அடைந்ததே ஒரு சுவாரசியமான கதைதான்.

 Actress Asin

   

தமிழை தொடர்ந்து இந்தியில் நடித்த அசினுக்கு, நடிகர் அக்‌ஷய்குமார் மூலம் ஒரு பங்க்‌ஷனில்தான் ராகுல் சர்மா அறிமுகமானார். அவர் யாரென்றே தெரியாமல் அவருடன் கொஞ்சநேரம் அசின் ஜாலியாக பேசி இருக்கிறார். பிறகு அக்‌ஷய்குமாரிடம் கேட்ட போது, அவர்தான் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ என கூறியிருக்கிறார். அதன்பின்பு தான் அசினுக்கு, ராகுல் சர்மா மீது அதிக காதல் ஏற்பட்டு இருக்கிறது. கஜினி படத்தில் ஏர்வாய்ஸ் என்ற பெரிய மொபைல் போன் நிறுவனத்தின் முதலாளி என தெரியாமல் சூர்யாவை, அசின் காதலிப்பது போலவே அவரது நிஜவாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.

   

 Actress Asin

 

ராகுல் சர்மா, பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்ளாதவர். மீடியாக்களிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவர் என்ற நிலையில், அசின் அவரை யார் என்ற கேட்ட விஷயம், அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி, இருவருக்கும் நட்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிறகு நட்பு காதலாகி, திருமணமாகி இப்போது கணவர், பிள்ளையுடன் அசின் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகளையும் அசின்தான் இப்போது கவனித்துக் கொள்கிறார். சாதாரண நடிகையாக துவங்கிய வாழ்க்கை, இன்று 1300 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக மைக்ரோமேக்ஸ் நிறுவன உரிமையாளராக அசினை மாற்றி இருக்கிறது.