சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, மது அருந்த தந்தை பணம் தராத ஆத்திரத்தில் அவரது குடிசை வீட்டுக்கே மகன் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்ககிரி அரசிராமணி மேற்கு ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகன் ரமேஷ், லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ், இதற்காகத் தந்தை ராஜுவிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தகராறு செய்து வந்துள்ளார்.
திங்கள்கிழமை இரவு மது அருந்த பணம் தருமாறு ரமேஷ் கேட்டபோது, தந்தை மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், தந்தை வசித்து வந்த குடிசை வீட்டுக்குத் தீ வைத்துவிட்டுத் தப்பியோடினார். தீ மளமளவெனப் பரவியதில், ராஜுவின் வீடு மட்டுமின்றி அருகில் இருந்த உறவினர்களின் வீடுகள் என மொத்தம் மூன்று குடிசைகள் தீப்பற்றி எரிந்து நாசமாகின. இதில் வீட்டிலிருந்த நகை, பணம் மற்றும் மளிகைப் பொருட்கள் அனைத்தும் கருகிச் சேதமடைந்தன.
பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு வீடுகளுக்குள் இருந்த எரிவாயு சிலிண்டர்களை வெளியேற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எடப்பாடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து ரமேஷின் தாய் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தேவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ரமேஷைத் தேடி வருகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…