கோடை வெயிலுக்குப் பிறகு பெய்யும் முதல் மழையின் போது, காய்ந்த மண்ணில் விழுந்து எழும் மண் வாசனை அனைவரையும் மயக்கக் கூடியது. இந்த மண் வாசனைக்கு அறிவியல் பூர்வமாக ‘பெட்ரிகோர்’ ன்று பெயர். புகழ்பெற்ற தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இந்த வார்த்தையின் பின்னணியில் உள்ள சுவாரசியமான கதையைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள தகவலின்படி, ‘பெட்ரிகோர்’ என்ற வார்த்தை இரண்டு கிரேக்க சொற்களிலிருந்து உருவானது. ‘பெட்ரா’ என்றால் கல் அல்லது பாறை என்றும், ‘ஐகோர்’ என்றால் கிரேக்க புராணங்களின்படி கடவுள்களின் நரம்புகளில் ஓடும் ஒரு வகையான திரவம் என்றும் பொருள்படும். அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இதற்கு ‘பாறைகளின் இரத்தம்’ என்று அர்த்தம் கொள்ளலாம் என அவர் விளக்கியுள்ளார்.
இருப்பினும், இந்த அறிவியல் விளக்கம் இந்தியாவின் மழைக்கால உணர்வோடு முழுமையாகப் பொருந்தவில்லை என்று ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார். இந்தியர்கள் முதல் மழையை ஒரு காதல் உணர்வோடு எதிர்நோக்குவதால், இந்த மயக்கும் மண் வாசனைக்கு ‘தில் கா சோர்’ (Dil Ka Chor – இதயத்தைத் திருடிச் சென்றவன்) என்ற தேசி பெயர் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அவர் வேடிக்கையாகக் கூறியுள்ளார். இவரது இந்த அழகான பதிவும், புதிய பெயரிடலும் இணையத்தில் பலரது வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
ஆன்லைன் கடன் செயலிகளின் பேராசைக்கும், டிஜிட்டல் மிரட்டல்களுக்கும் மற்றுமொரு இளம் உயிர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…
அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…
தமிழகப் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி…
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…