அட பாவிங்களா?… “உயிரோடு விளையாடாதீங்க…” கரைபுரண்டு ஓடும் மரண வெள்ளம்…நடு ஆற்ற்றில் சிறுவர்கள் செய்த ‘அபாய சாகசம்’… நெஞ்சை நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!

Spread the love

மழைக்காலத்தில் ஆறுகளில் நிலவும் பேராபத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், உத்தராகண்ட் காவல்துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பெய்த பலத்த மழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் வேளையில், நடுவில் இருக்கும் ஒரு பெரிய பாறையில் மூன்று சிறுவர்கள் நிற்கின்றனர். ஆற்று வெள்ளத்தின் வேகம் அச்சுறுத்தும் வகையில் இருந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் அச்சிறுவர்கள் திடீரெனப் பாய்ந்து நீந்தத் தொடங்குகின்றனர். வெள்ளப்பெருக்கின் போது ஆற்று நீரின் வேகம், மறைந்திருக்கும் பாறைகள் மற்றும் திடீர் நீர்மட்ட உயர்வு ஆகியவை நொடிப் பொழுதில் உயிரைப் பறிக்கக்கூடியவை என்பதைச் சுட்டிக்காட்டிய காவல்துறை, இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த விடியோவைப் பார்த்த ஏராளமான பயனர்கள், காவல்துறையின் விழிப்புணர்வு முயற்சியைப் பாராட்டுவதோடு, அச்சிறுவர்களின் பொறுப்பற்ற செயலுக்குக் கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பல உயிர்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்தபோதிலும், சிலர் எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் அனைவரும் இதுபோன்ற ஆபத்தான இடங்களை விட்டு விலகி பாதுகாப்பாக இருக்குமாறும், யாரேனும் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டால் உடனடியாக 112 என்ற அவசர உதவி எண்ணிற்குத் தகவல் தெரிவிக்குமாறும் உத்தராகண்ட் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Visaka

Recent Posts

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

49 seconds ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

3 minutes ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

9 minutes ago

“அம்மாடியோ… 74 ஆண்டுகள் கழித்து வெளிவந்த பகீர் உண்மை… 52 உயிர்களைக் குடித்த… மாய விமானத்தின் பாகங்கள் மீட்பு…! 2,000 அடி அட்லாண்டிக் ஆழத்தில் அதிர்ச்சி காட்சி…!!”

1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள்…

14 minutes ago

“ஐயோ என்னடா இது… அங்கன்வாடி முட்டையை உடைத்த பெற்றோர்… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறித் துடித்த கொடூரம்…! தூத்துக்குடியில் பரபரப்பு…!”

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், ஒரு வயது முதல் இரண்டு…

14 minutes ago

“ஒரே புள்ளியில் இணைய வேண்டும்…” திமுக – பாஜக கூட்டணியா…? விமர்சனங்களுக்கு அமைச்சர் வன்னி அரசு அதிரடி பதில்…!!

திமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கப்போவதாக பரவி வரும் செய்திகள் குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான வன்னி…

15 minutes ago