Connect with us

CINEMA

சிங்கப்பூரில் நடந்த ஆப்ரேசனில் சிறிய தவறு.. விஜயகாந்த் முடங்கி போனதற்கு இது தான் காரணமா..? 40 வருடம் கேப்டனுடன் பயணம் செய்த நபர் சொன்ன தகவல்..

தமிழ் சினிமாவில் கேப்டன் என அழைக்கப்பட்ட விஜயகாந்த், கடந்த 28ம் தேதி காலமானார். அவரது மறைவு குறித்து அவருடன் 40 ஆண்டுகாலம் பயணித்தவரும், தேமுதிக துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி கூறியதாவது, ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி என்னைப் போன்ற கட்சி நிர்வாகிகளுக்கும் தானாக முன்வந்து உதவியவர்தான் விஜயகாந்த். எனது திருமணத்தை அவர்தான் நடத்தி வைத்தார். எனக்கு 2 மகன்கள். எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை அவர்களது படிப்புச் செலவை முழுவதுமாக அவரே ஏற்றுக்கொண்டார்.

   

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இப்படி ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் கல்வி உதவிக்கேட்டு விண்ணப்பங்கள் வரும். அந்த விண்ணப்பங்களை போல, கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்களிடம் இருந்தும் லிஸ்ட் வாங்கி, அவர்களது பிள்ளைகளின் கல்விச் செலவை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டவர் விஜயகாந்த். இதற்காகவே ஆண்டுதோறும் கல்விச் செலவுகளை பல லட்சங்களை செலவிடுவார்.

2015ம் ஆண்டில் இருதய பிரச்னை காரணமாக சென்னை அப்பல்லோவில் கேப்டனுக்கு ஆபரேசன் செய்ய முடிவானது. இங்கு கட்சிக்காரர்கள், அரசியல்வாதிகள் என கூட்டமாக இருந்ததால், சிங்கப்பூரில் அந்த ஆபரேசனை செய்ய முடிவானது. அப்போது ஏதோ சின்ன மிஸ்டேக் நடந்துள்ளது. இருதய ஆபரேசன் செய்யும் போது, மூளைப்பகுதிக்குள் ரத்தக்குழாயில் ரத்தம் சென்றுவிட்டதாக கூறினா். அது கேப்டன் குடுமபத்தினருக்கே தெளிவாக தெரியும். அதன்பிறகுதான் அவரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குரல்வளம் கெட்டுப்போய் பேசவே சிரமப்பட்டார்.

ஒரு கட்டத்தில் பேச முடியாமலேயே போய்விட்டது. 2019க்கு பிறகு நிற்கவும், தனியாக நடக்கவும் அவரால் முடியாமல் போய் கடைசியில் நோயுடன் போராடிக்கொண்டே அவர் இறந்துவிட்டார். அவர் அரசியலுக்கு வராமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் அப்படியே நடித்துக்கொண்டு இருந்திருப்பார். இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது என்று இப்போது நாங்கள் வேதனைப்படுகிறோம், என்று கூறியிருக்கின்றனர்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top