“ஆட்டோ டிரைவர் மகள் டு இன்ஸ்டா ஸ்டார்!.. காதலன் செய்த துரோகம் உண்மையா?.. ₹9.5 லட்சம் UPI ஆதாரத்துடன் வக்கீல் கொடுத்த அதிரடி ட்விஸ்ட்”..!!

Spread the love

பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரான ரோனிஷா சட்டி என்ற இளம் பெண், இரண்டு உருக்கமான வீடியோக்களை வெளியிட்டுவிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தற்கொலை முயற்சிக்குக் காரணம் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பிரசாந்த் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினர்தான் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரசாந்த் தனக்கு எதிராகப் போலி சமூக வலைதளப் பக்கத்தை உருவாக்கி, அதில் ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பரப்பி ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தியதாக ரோனிஷாவின் தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், தையல் வேலை மற்றும் ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டுப் படிக்க வைத்த தங்களுக்குப் போலீசார் உதவவில்லை என்றும், பிரசாந்த் தங்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பிடுங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், இக்குற்றச்சாட்டுகளை பிரசாந்த் சர்மாவின் வக்கீல் முற்றிலும் மறுத்துள்ளார். கடந்த 2024 நவம்பரில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், இப்பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாகக் கூறி தங்களை நம்ப வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் சொகுசு ஷாப்பிங் மற்றும் துபாய் பயணங்களுக்காகப் பிரசாந்த் அவளுக்கு நகைகள் மற்றும் யுபிஐ (UPI) வழியாக 9.5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பியுள்ளார். ஒருகட்டத்தில் திருமணத்தைத் தள்ளிப்போட்ட இப்பெண், தங்களின் ஆசைகள் நிறைவேறியதால் திருமணம் செய்ய முடியாது எனக் கூறியதாக வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த பிரசாந்த் நீதிமன்றத்தை நாடியபோதுதான், அந்தப் பெண்ணிற்கு இன்னும் முதல் கணவரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏமாற்று வேலை (Cheating) செய்ததாகப் போலீசார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் ஏற்கனவே நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், தற்கொலை முயற்சி என்பது எதற்கும் தீர்வாகாது என்றும், பாதிப்புகள் இருந்தால் அதைச் சட்டப்படிதான் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்றும் பிரசாந்தின் வக்கீல் தெரிவித்துள்ளார். தற்போது அந்தப் பெண் ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Muthu Mani

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்… காவல் நிலையம் அருகே கார் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு… 7 பேர் ரத்த வெள்ளத்தில் சுருண்ட சம்பவம்… ஷாக்கிங் வீடியோ….!

ஹரியானாவின் சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பட்டப்பகலில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர்…

10 minutes ago

“விஜய் அங்கிள் பாவம்ப்பா”…. சட்டமன்றத்தில் குண்டை தூக்கி போட்ட எம்.எல்.ஏ மகள்கள்… ரகசியத்தை அவையிலேயே போட்டு உடைத்த திமுக எம்.எல்.ஏ…!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவை நிகழ்வுகள் கிரிக்கெட் போட்டியைப் போல பொதுமக்கள்…

26 minutes ago

சமையலறையில் ஒளிந்த மனைவி… இரக்கமின்றி கொன்ற கணவன்…. வெப்சீரிஸ் பாணியில் அரங்கேறிய பயங்கரம்…. திடுக்கிடும் பின்னணி…..!

கிழக்கு டெல்லியில் சொத்து தகராறு காரணமாக 'தி ஸ்டேர்கேஸ்' என்ற வெப் சீரிஸைப் பார்த்துத் திட்டமிட்டு மனைவியைக் கொடூரமாகக் கொலை…

43 minutes ago

“சட்டசபையில் பொங்கி எழுந்த பிரேமலதா”…. ‘அண்ணன் ஓபிஎஸ்’ கொடுத்த அல்டிமேட் காமெடி பதிலடி… கலகலத்த தமிழக சட்டமன்றம்…!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தின் போது, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல்…

52 minutes ago

#BREAKING: விவாகரத்தை வாபஸ் வாங்கிய சங்கீதா…. நீதிமன்றத்தில் பரபரப்பு திருப்பம்…. CM விஜய் மகிழ்ச்சி…!

தமிழக முதலமைச்சரும், முன்னணி நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை அவரது…

57 minutes ago

“இபிஎஸ் பேரு சொல்லுங்க அண்ணே”…. அவையிலேயே கூச்சலிட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்…. அலட்டிக்கொள்ளாத வேலுமணி…. அடுத்த பரபரப்பு…!

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அதிமுக மற்றும் ஆளும் திமுக இடையே காரசார விவாதங்கள் எழுந்த நிலையில், முன்னாள்…

2 மணத்தியாலங்கள் ago