“சட்டசபையில் பொங்கி எழுந்த பிரேமலதா”…. ‘அண்ணன் ஓபிஎஸ்’ கொடுத்த அல்டிமேட் காமெடி பதிலடி… கலகலத்த தமிழக சட்டமன்றம்…!

Spread the love

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தின் போது, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல் அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. கைத்தறி தினத்தை முன்னிட்டு எம்.எல்.ஏ-க்களின் கதர் ஆடையைப் பாராட்டிப் பேசத் தொடங்கிய பிரேமலதா, விஜயகாந்த் கடைசி வரை கதர் ஆடையை உடுத்தியதை நினைவுகூர்ந்தார். தொடர்ந்து பேசிய அவர், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும், திறந்தவெளியில் கிடக்கும் நெல் மணிகளைப் பாதுகாக்க கிடங்குகளை விரைந்து பயன்படுத்த வேண்டும் எனவும் அரசை வலியுறுத்தினார்.

காவிரி, நீட் மற்றும் மேகதாது போன்ற தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரேமலதா முன்வைத்தார். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழகப் பிரச்சினைகளுக்காகப் பிரதமரிடம் அனைவரையும் அழைத்துச் சென்றதைச் சுட்டிக்காட்டிய அவர், முதல்வர் தமிழகத்தின் உரிமைக்காகப் போராட வேண்டும் என்றார். மேலும், மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா செல்லவிருந்த தமிழக முதல்வரை அங்கு வர வேண்டாம் என அம்மாநில முதல்வர் கூறியதைக் குறிப்பிட்ட பிரேமலதா, “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கு கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் வந்து முதல்வரைச் சந்திக்கலாமே” என்று கேள்வி எழுப்பினார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பிரேமலதா, சட்டசபையில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்தும் பேசினார். “அவையில் குடிப்பதற்கு ஒரு பாட்டிலில் தண்ணீர் கேட்டால், அண்ணன் ஓபிஎஸ் அதற்கும் தடை போட்டுவிட்டார்” என்று நகைச்சுவையாகக் கூறினார். நேற்றைய தினம் இதுகுறித்து ஓபிஎஸிடம் கேட்டபோது, அவர் “சும்மா சொன்னேன்மா” எனப் பதிலளித்ததாகவும் பிரேமலதா குறிப்பிட்டார். இதற்குத் தீர்வாக அவையில் தண்ணீர் பாட்டில்களை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

பிரேமலதாவின் பேச்சுக்கு உடனடியாகப் பதிலளித்த ஓபிஎஸ் எழுந்து, “தண்ணீர் பாட்டிலுக்கு நான் தடை போட்டதாக அண்ணியார் சொல்கிறார்; ஆனால் நான் அப்படி எந்தத் தடையும் போடவில்லை. நான் கூறிய அந்தக் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன், சபாநாயகர் இதுகுறித்துத் தக்க முடிவெடுக்கலாம்” எனக் சிரித்தபடி கூறினார். முன்னதாகத் தனியார் மண்டபப் பொதுக்குழுவில் தன் மீது அதிமுகவினர் தண்ணீர் பாட்டில் வீசிய சொந்த அனுபவத்தை நினைவுகூர்ந்து ஓபிஎஸ் பேசியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஓபிஎஸ் தன் சொந்த அனுபவத்தைச் சொல்கிறார்” எனக் கலாய்க்க, அவையே கலகலப்பானது.

Nanthini

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

6 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

6 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

6 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

6 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago