பட்டப்பகலில் பயங்கரம்… காவல் நிலையம் அருகே கார் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு… 7 பேர் ரத்த வெள்ளத்தில் சுருண்ட சம்பவம்… ஷாக்கிங் வீடியோ….!

Spread the love

ஹரியானாவின் சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பட்டப்பகலில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். நீதிமன்ற விசாரணையில் பங்கேற்பதற்காக அமித், அங்கித், சூரஜ், விஜய் உள்ளிட்ட சிலர் ஒரு ஸ்கார்பியோ காரில் சென்றுகொண்டிருந்தபோது, சர்தார் தாத்ரி காவல் நிலையம் அருகே நடந்தே வந்த மூன்று ஆயுதம் ஏந்திய நபர்கள் அந்த வாகனத்தை நோக்கி 10 முதல் 15 சுற்றுகள் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். இச்சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர காயமடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக ரோத்தக்கில் உள்ள PGIMS மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இத்தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்புப் படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு தப்பிச்செல்லும் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரோஹித் கோடாரா கும்பலின் சார்பில் நவீன் பாக்சர் என்பவர் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாகக் கூறும் குரல் பதிவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாக்குதலில் சிக்கிய வாகனத்தில் இருந்தவர்களுக்கு ஏற்கெனவே குற்றப் பின்னணி இருப்பதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இச்சம்பவம் தனிப்பட்ட பகையா அல்லது ரவுடிகளுக்கிடையேயான மோதலா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.instagram.com/reel/DbtoYS0TFzC/?utm_source=ig_embed&ig_rid=AUX35lffqPE9sAgL604s71_

பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், ஹரியானா மாநிலத்தில் சட்ட அமலாக்கம் மற்றும் ரவுடிக் கும்பல்களின் அச்சுறுத்தல் குறித்தான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. சமீபகாலமாக அதிகரித்து வரும் ரவுடிகளின் மோதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்து மாநில அரசைக் விமர்சித்து வருகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற கும்பல்களை உடனடியாகக் ஒடுக்கி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அம்மாநிலத்தில் மீண்டும் வலுத்துள்ளது.

Nanthini

Recent Posts

“அவனைக் கொன்னுடு.. இல்லனா நான் செத்துருவேன்”….. மனைவியின் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்து அலறி அடித்து ஓடிய கணவன்…. இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்…!

மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலம் சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவருக்கும், சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்பவருக்கும்…

11 minutes ago

“விஜய் அங்கிள் சொன்னது தான் எனக்கு நடந்துச்சு”… தந்தையை பதறவைத்த 8 வயது மகளின் வாக்குமூலம்.. நிஜத்தில் வெளிவந்த பகீர் சம்பவம்…!!

சென்னையை அடுத்த கே.கே. நகரில் வசிக்கும் 8 வயது சிறுமி, பெற்றோர் பிரிந்து வாழ்வதால் தனது தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து…

16 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அரங்கேறிய உச்சகட்ட திருப்பம்… பின்னணியில் ஷோபா சந்திரசேகர்…. உடைந்தது ரகசியம்….!

தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை இன்று செங்கல்பட்டு குடும்ப நல…

17 minutes ago

“சிறுமிடம் ஆசை வார்த்தை கூறி தினமும் உடலுறவு”.. வெளிவந்த 5,000 கொடூரங்கள்… பல வருடப் போராட்டத்திற்குப் பின் சிக்கிய நபர்…நீதிமன்றத்தையே அதிரவைத்த அதிர்ச்சிப் பின்னணி…!!

பென்சில்வேனியாவில் சிறுமியை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 37 வயதான நிக்கோலஸ் ஆலன் ஸ்பென்சர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

29 minutes ago

“முடிந்தால் நீக்கிப் பாருங்கள்”…. எடப்பாடிக்கு விழுந்த பேரிடி…. சத்தமில்லாமல் நடந்த ‘ஆப்ரேஷன் வேலுமணி…. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் காத்திருக்கும் பெரிய சம்பவம்…!

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய உட்கட்சி மோதல்கள் அதிமுகவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. தேர்தல் பின்னடைவுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே காரணம்…

30 minutes ago

“மணி 2.15 ஆச்சு சார்… எங்க சாப்பாடு போடுறாங்களோ”…. சட்டசபையில் சிரிப்பலை ஏற்படுத்திய சி.வி. சண்முகம்…!

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.…

37 minutes ago