“விஜய் அங்கிள் சொன்னது தான் எனக்கு நடந்துச்சு”… தந்தையை பதறவைத்த 8 வயது மகளின் வாக்குமூலம்.. நிஜத்தில் வெளிவந்த பகீர் சம்பவம்…!!

Spread the love

சென்னையை அடுத்த கே.கே. நகரில் வசிக்கும் 8 வயது சிறுமி, பெற்றோர் பிரிந்து வாழ்வதால் தனது தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். அவ்வப்போது சிறுமியைச் சந்திக்க வரும் அவரது தாய், தான் வேலை பார்க்கும் இடத்திற்கு குழந்தையை அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில், தந்தை தனது குழந்தைகளை சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்படத்தில் நடிகர் விஜய் ‘குட் டச், பேட் டச்’ குறித்து விளக்கும் விழிப்புணர்வுக் காட்சியைப் பார்த்த அந்தச் சிறுமி, தனது தாயின் பணிவிடத்தில் பெரியன் என்ற நபர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதை உணர்ந்து, நடந்தவற்றை உடனடியாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

மகளின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, இது தொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுமியிடம் அத்துமீறிய நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு விழிப்புணர்வுக் காட்சியின் மூலம், தனக்கு நேர்ந்த அநீதியை ஒரு சிறுமி தைரியமாக வெளிப்படுத்தி குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Gayathri

Recent Posts

ஐயோ பாவம்… சுரங்கப்பாதையில் நொறுங்கிய SUV கார்… கதறித் துடித்த பயணிகள்… காங்கிரஸ் முக்கிய புள்ளி பரிதாப பலி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…

9 minutes ago

அட கொடுமையே… வாடிக்கையாளர் போல வந்து துப்பாக்கிச் சூடு… நகைக் கடையில் நடந்த பகீர் சம்பவம்… பதறவைக்கும் வீடியோ…!

பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…

16 minutes ago

ஐயோ… என் 300 ரூபாய் போச்சு… தம்பிக்குத் துணி எடுக்க முடியாதே?… கதறி அழுத பாட்டி… பேருந்துக்குள் நடந்த அந்த சம்பவம்… நெட்டிசென்களை கலங்க வைக்கும் வைரல் வீடியோ…!

ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…

25 minutes ago

காதலனா? கணவனா? துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் பார்சல்… சினிமாவை மிஞ்சும் கொடூரம்… காட்டிக்கொடுத்த சென்ட்ரல் சிசிடிவி… போலீஸ் வலைவீச்சு…!!

சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற…

33 minutes ago

“அவனைக் கொன்னுடு.. இல்லனா நான் செத்துருவேன்”….. மனைவியின் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்து அலறி அடித்து ஓடிய கணவன்…. இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்…!

மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலம் சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவருக்கும், சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்பவருக்கும்…

45 minutes ago