தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவை நிகழ்வுகள் கிரிக்கெட் போட்டியைப் போல பொதுமக்கள் மற்றும் இணையவாசிகளிடையே பெருத்த கவனத்தைப் பெற்றுள்ளன. தவெக அரசு தனது முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, தற்போது அதன் மீதான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. திமுக மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையே நடைபெறும் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளன.
இந்த விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆற்றிய உரை இணையத்தில் பெரும் டிரெண்டாகி வருகிறது. அவர் பேசுகையில், “மாணவர் பருவத்தில் விஜயின் தீவிர ரசிகனாக இருந்தவன் நான்; கல்லூரி காலத்தில் அவர் நடித்த ‘லவ் டுடே’ படத்தை 6 முறை பார்த்து ரசித்துள்ளேன். ஒரு சிறந்த நடிகராக, நடனக் கலைஞராக அவரை எனக்குப் பிடிக்கும். ஆனால், அவர் முதலமைச்சராக நடிப்பதைத்தான் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேடைப் பேச்சைப் போல சட்டமன்றத்தில் பேசக் கூடாது” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தவெக அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டை ‘ஜீரோ பட்ஜெட்’ எனக் குறிப்பிட்ட அவர், நல்ல பெயர் எடுப்பதற்காக முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பயனுள்ள திட்டங்களின் பெயர்களை மாற்றும் பணியை மட்டுமே இந்த அரசு செய்து வருவதாகச் சாடினார். அத்துடன், தனது குடும்பத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வு ஒன்றைப் பகிர்ந்த அவர், “என் மகள்கள் என்னிடம் வந்து ‘விஜய் அங்கிளுக்கு எதுவும் தெரியாதுப்பா, சட்டமன்றத்தில் அவர் பாவம்… நீங்கள் ஏடாகூடமாகக் கேள்வி கேட்டு அவரைச் சங்கடப்படுத்த வேண்டாம்’ என்று கூறினார்கள்” எனக் குறிப்பிட்டது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
திமுக உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனின் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை திமுக ஆதரவாளர்கள் உற்சாகமாகப் பகிர்ந்து வர, தவெக தொண்டர்களும் இணையத்தில் இதற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் சட்டமன்றத்திற்கு உள்ளே மட்டுமின்றி, இணையத்திலும் திமுக vs தவெக என்ற ரீதியில் விவாதக் களம் களைகட்டியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…