பில்ட் ரிவார்ட்ஸ் நிறுவனம் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் அங்கூர் ஜெயின் இந்தியாவை சேர்ந்தவர். இவருக்கும் முன்னாள் WWE மல்யுத்த வீராங்கனை எரிகா ஹம்மண் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இவர்களது திருமணம் எகிப்தில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. திருமணத்தில் ஆட்டம் பாட்டம், வானவேடிக்கை என அனைவரையும் கவரும் விதமாக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. அங்கூர் ஜெயின் மற்றும் எரிக்காவின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் பங்கேற்றனர்.
இந்த திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது. அதிலும் முக்கியமாக எரிகா அணிந்திருக்கும் ஆடையை இந்தியாவின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான ராகுல் மிஸ்ரா டிசைன் செய்திருக்கிறார். அந்த ஆடையில் தங்கத்தால் டிசைன் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உலகின் அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடு முன்பு ரம்யமான சூழ்நிலையில் காதல் ஜோடிகள் திருமணம் செய்துள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அதனைப் பார்த்து பலரும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.