Connect with us

விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் நாக சைதன்யா.. விலையைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

CINEMA

விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் நாக சைதன்யா.. விலையைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

 

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நாக சைதன்யா.  3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா. ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும் தனது இளமைப் பருவத்தை சென்னையில் கழித்தவர்.

   

2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் நாகசைதன்யா. தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது கஸ்டடி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இதனை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூர் தயாரித்திருந்தார். இதில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்திருந்தார்.

சமீபத்தில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார் நாகசைதன்யா. அதில் தனக்கு கார்கள் மீது இருக்கும் ஈடுபாடு குறித்தும் சென்னையில் இருந்து தான் தனக்கு கார்கள் மீது ஒரு ஈர்ப்பு துவங்கியது என்று கூறி பல விஷயங்களை பேசி இருந்தார். கார் தான் தனக்கு முதல் மனைவி என்று கூறிய நாகசைதன்யா, சென்னையில் இருந்த போது முதன் முதலாக தான் ஓட்டி பழகிய கார் பியட் நிறுவனத்தின் பேலியோ காரை தான் என்று கூறியிருந்தார்.

தனக்கு 19 வயது இருக்கும்போது எனது குடும்பத்தினர் ஹைதராபாத்துக்கு குடி பெயர்ந்த நிலையில் பல சூப்பர் பைக்குகளை ஓட்டி பழகினேன். அங்கு சென்ற பிறகு மிட்சுபிஷி நிறுவனத்தின் லான்சர் என்கின்ற காரை தான் வாங்கி ஓட்டியதாக தெரிவித்திருந்தார். இன்றளவும் இந்த கார்களுக்கு மவுசு உள்ளது.

இந்நிலையில் நாகசைதன்யா தன்னிடம் பெர்ராரி முதல் பிஎம்டபிள்யூ வரையிலான பல சொகுசு கார்களை தனது கேரிஜில் வைத்து இருக்கின்றார். அந்த சேகரிப்பில் தற்போது புதிய கார் ஒன்றை சேர்த்துள்ளார். அது போர்ஷே 911 GT3RS  என்ற காரை வாங்கி இருக்கின்றார். இந்த காரின் முந்தைய ஷோரூம் விலை 3. 51 கோடி ஆகும்.

மே 17ஆம் தேதி இந்த கார் பதிவு செய்யப்பட்டு ஹைதராபாத்துக்கு கொண்டுவரப்பட்ட முதல் கார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் சென்னை போர்ஸ் சென்டர் நாகசைதன்யா காருடன் கொடுத்திருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். நாகசைதன்யா ஓட்டி செல்லும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top