தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வரும் அசார் தொடர்ந்து பெண் வேடமிட்டு வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. முதலில் மாடர்ன் உடையில் அவர் புகைப்படத்தை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது சேலையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலக்கி வருபவர் அசார். இவர் சன் மியூசிக் நிகழ்ச்சியில் ஆங்கராக பணியை தொடங்கினார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
2007 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்த இவர் நினைத்தது யாரோ என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு ரேடியோவில் பணியாற்றி வந்தார்.
தற்போது பல பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வருகின்றார். பல பிரபலங்களை இன்டர்வியூ எடுத்தும் வருகின்றார். சமீப காலமாக விதவிதமாக போட்டோ சூட் எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார். தற்போது பெண் வேடமிட்டு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது .
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடன் உடையில் பார்ப்பதற்கு அச்சு அசலாக பெண் போல் இருந்த அசார். தற்போது புடவையில் மங்களகரமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.