தமிழ் சினிமாவின் தன்னுடைய சிறப்பான நடிப்பாலும் எதார்த்தமான பேச்சாளும் ஒரு தவிர்க்க முடியாத பிரபலமாகி இருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி. முதலில் காமெடியனாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர். அதன் பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது ஹீரோவாக இயக்குனராக கலக்கி வருகின்றார். அதிலும் முக்கியமாக அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கி வெற்றி படங்களை கொடுத்து வருகின்றார்.
அதிலும் மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அம்மன் படங்களில் வித்தியாசமாக வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் . ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே பாலாஜி எழுதி இயக்கி அவரை நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
இந்த திரைப்படத்தில் ஊர்வசி, நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்திருப்பார். இந்த ரோளுக்கு முதலில் ஆர்.ஜே பாலாஜி தேர்ந்தெடுத்தது நயன்தாராவை இல்லையாம். ஹீரோவாக நடிக்க தொடங்கிய பிறகு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக சிறப்பான நடிப்பு, இயக்கம் என கவனம் செலுத்தி தொடங்கினார்.
அப்படி மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை எடுக்கும் போது டிராமாவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்க வேண்டும் என்று இருந்தாராம். அதனால் இப்படத்தில் பாட்டு, காதல், டான்ஸ் என எதுவும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்து இருக்கின்றார். சென்னையில் நடக்கும் கதையாக இல்லாமல் மொத்த தமிழ்நாடு விரும்பும் படி இருக்க வேண்டும் என்பதால் லால்குடியில் இப்படத்தை இயக்கியிருந்தார்.
மேலும் இப்படத்தை எழுதும்போது முதலில் அனுஷ்காவை நினைத்து தான் எழுதினாராம். அம்மன் ரோலுக்கு அவர் தான் சரியாக இருப்பார் என்று கூறி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால் அவர் தற்போது தான் பிஸியாக இருப்பதாகவும் எட்டு மாதம் கழித்து தான் கால்ஷீட் கொடுக்க முடியும் என்று கூறிவிட்டார். அதைத்தொடர்ந்து ஒருமுறை சுருதிஹாசன் தனக்கு போன் செய்யும்போது அவரிடம் இந்த கதையை கூறும் போது நான் தான் செய்வேன் என்று அவர் மிகவும் அடம் பிடித்து இருக்கின்றார்.
பின்னர் எதார்த்தமாக விக்னேஷ் சிவனை சந்திக்க அவர் நயன்தாராவிடம் இந்த கதையை கூறுங்கள் என்று சொல்லி இருக்கிறார். எப்படியும் சம்மதிக்க மாட்டார் என்று எண்ணிக் கொண்டு அவரிடம் சென்று கதையை கூற முதல் பாதியை கூறிய உடனே இப்படத்தில் நான் தான் நடிப்பேன் என்று உறுதியாக கூறிவிட்டாராம். பின்னர் ஸ்ருதிஹாசனை விட்டுவிட்டு நயன்தாராவை வைத்து இப்படத்தை எடுத்து இருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி.