பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய விஷால்.. அவருக்கு பதில் புது எழிலாக இவரா..? வெளியான தகவல்..!

By Mahalakshmi on மே 21, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வருபவர் பதிலாக வேறு ஒரு நபர் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதில் முக்கியமான சீரியல் பாக்கியலட்சுமி எதிர்பாராத திருப்பங்களுடன் அடுத்தடுத்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

   

இந்த சீரியலில் பல வருடமாக பாக்கியம் மற்றும் கோபியின் பிரச்சினை தான் ஓடிக்கொண்டிருந்த நிலையில் மாற்றி மாற்றி எழில் மற்றும் செழியனுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என வந்து போய்க்கொண்டு இருந்தது. பாக்யா பலமுறை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார்.

   

 

மீண்டும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டு கோபி வீட்டிற்கு வந்து அவமானப்படுவது போன்றவை நடந்து கொண்டே இருக்கின்றது. சீரியல்கள் பொருத்தவரை பல நடிகர்கள் வெளியேறுவதும் புது நடிகர்கள் நடிக்க வருவதும் தொடர்கதை தான். ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்கின்ற கேரக்டரில் நடித்து வந்த இவர் தற்போது ஜீ தமிழ் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அமிர்தாவாக நடித்து வந்த ரித்திகாவும் திடீரென்று சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் அமிர்தாவின் கணவராக எழில் கேரக்டரில் சிறப்பாக நடித்து வருபவர் விஜே விஷால். இன்றைய எபிசோடில் இருந்து அவர் மாற்றப்படுவார் என்று கூறப்படுகின்றது. இதற்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த நடிகர் நவீன், எழிலாக அறிமுகமாக இருக்கின்றார்.

இது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விஜே விஷாலுக்கு இந்த சீரியலில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் இப்படி அவர் வெளியேறி இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து விஜே விஷால் இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.