மனிதன் உயிர் வாழ உணவு எவ்வளவு முக்கியமோ அதுபோல தண்ணீரும் மிக முக்கியமானது. ஒரு நாளைக்கு சராசரியாக 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். தாகம் எடுக்கும் போது கண்டிப்பாக நீர் அருந்த வேண்டும். தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடித்தாலும் மீண்டும் தாகம் எடுத்தால் தேவைப்படும் அளவுக்கு தண்ணீரை அருந்தலாம். தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
நீர் பருக ஏற்ற நேரம் எது என்றால் தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் உடம்பிற்கு நீர் தேவை என்பதை தாகம் உணர்த்துகிறது. உடல் வறட்சியால் மயக்கம் வாந்தி தலைசுற்றல் மன பாதிப்புகள் ஞாபகமருதி கவனக்குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் வறட்சியால் குறைந்த ரத்த அழுத்தம் அதிக சோர்வு போன்ற உபாதைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
குளிர்ந்த நீர் வழக்கத்தை விட ஒரு லிட்டர் தண்ணீர் அதிகமாக குடித்தால் உடல் எடையை ஒரு சில மாதங்களில் குறைக்கலாம். தண்ணீர் உடலில் சக்தியை அதிகரிக்கும். தண்ணீர் ஜீரண பிரச்சனைகளை சரிசெய்யும். வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வயிற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக சுடுநீர் குடித்து சரி செய்யலாம்.
உணவு ஜீரணிக்காமல் உடலில் தேங்கி இருந்தால் அதனை விரைவாக சரி செய்ய உதவும். மலச்சிக்கலில் அவதிப்படுபவர்கள் சுடுதண்ணீர் குடிப்பதால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். அந்த சுடு தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றையும் பச்சை தேயிலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…