யுபிஎஸ்சி (UPSC) குடிமைப்பணித் தேர்வின் முதன்மை கட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்று ஆளுமைத் தேர்வில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களின் பயணச் செலவுக்காக தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகையை அரசு வழங்குகிறது. இதற்காக நடத்தப்படும் மாதிரி ஆளுமைத் தேர்வுகளில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் இந்த நிதி உதவி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகையைப் பெற விரும்பும் தேர்வர்கள், வரும் டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்க வேண்டும். கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயரிய பதவிகளை அடைய வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்கள் ‘civilservicecoaching.com’ என்ற தளத்தில் பதிவு செய்து, தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு…
புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தன் எதிரொளியாக சிகரெட் விலை அதிகரிக்கும் என்று…
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…
குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…