தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி சந்தித்து பேசியதை தொடர்ந்து அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தார். அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்ற நிலையில் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் இந்த ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கூட்டணியில் கூடுதலாக எந்தெந்த கட்சிகள் இடம் பெற உள்ளது, தொகுதிகள் இறுதி செய்யப்பட வேண்டியது தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனையின் போது இபிஎஸ் இடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கூட்டணியில் 56 தொகுதிகள் ஒதுக்கவும் ஆட்சி அமைந்தால் மூன்று அமைச்சர் பதவிகளை வழங்கவும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் அதிமுக தரப்பில் பாஜகவிற்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் 20 சட்டமன்ற தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டது.
இருப்பினும் இந்த முறை 25லிருந்து 30 சட்டமன்ற தொகுதிகள் வரை மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக விரும்புவதாக தெரிகிறது. இப்படியான நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவது தொடர்பாக பல ஆலோசனைகள் மேற்கொண்டதாக தெரிகிறது.
இதற்காக டிடிவி தினகரன் பெங்களூரில் இருந்து டெல்லி சென்றதாகவும் அங்கிருந்து கிருஷ்ணமயன் சாலையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சரின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசியதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. எனவே மீண்டும் NDA கூட்டணியில் டிடிவி தினகரன் இணையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தென் மாவட்டங்களில் NDA கூட்டணியின் பலம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…