கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மெகா வெற்றி பெற்றுள்ளது. அங்கு புதிய முதலமைச்சராக வி.டி. சதீசனை காங்கிரஸ் கட்சி முறைப்படி தேர்வு செய்துள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில் வரும் மே 18-ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய்க்கு பிரத்யேக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவருடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பல்வேறு மாநில முதல்வர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். முதல்வர் விஜய்யின் இந்த கேரளா பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…